சந்தை ரவுண்ட்அப்!




Image result for iphone 8 and iphone 8 plus



மார்க்கெட்டுக்கு புதுசு!


iPhone 8 and iPhone 8 Plus

பலரும் ஆவலோடு எதிர்பார்த்த ஆப்பிள் ஐபோனின் சிவப்பு நிற சிறப்பு வெளியீடு. ரெட்டினா திரை, 3டி டச், வயர்லெஸ் சார்ஜ் என இதிலுள்ள டெக்னிக்கல் சமாச்சாரங்கள் கடந்து இப்போனின் விற்பனை வருமானத்தில் ஒருபகுதி எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மானியத்திற்கு செல்லவிருக்கிறது.

Energy Tablet 10 Pro 4


இசை, படங்களின் விசிறியா? உங்களுக்காகத்தான்  இந்த டேப்லட். 10.1 இன்ச் துல்லிய திரை, முன்புறம் 2 எம்பி பின்புறம் 5 எம்பி, நூகட் ஓஎஸ் என உருவாகியுள்ளது. குறைந்த பேட்டரி நுகர்வால் 8 மணிநேரங்களுக்கு ஆடியோ,வீடியோ பார்த்து மகிழலாம்.


Audeara A-01 headphones


டெய்லர் தைத்த சட்டை போல எங்களது ஹெட்போன் ஸ்பீக்கர் இருக்கும் என்பது ஆடியரா நிறுவனத்தின் வாக்கு. இடது காதுக்கும், வலது காதிற்கும் கேட்கும் முறையிலுள்ள வேறுபாட்டிற்கேற்ப இசையை அள்ளி வழங்குமாம் இந்த ஹெட்போன்.