ஐரோப்பாவின் நாசவேலை!
ஐரோப்பா செய்யும்
நாசவேலை!
கம்ப்யூட்டர்கள்,டேப்லட்கள்,
ஸ்மார்ட்போன்கள் என பழைய பொருட்கள் அனைத்தையும் ஐரோப்பா(ரஷ்யா உட்பட) நைஜீரியா நாட்டில் கொட்டப்பட்டு வருகின்றன.
ஓராண்டுக்கு 12.3 டன்கள் எலக்ட்ரானிக் குப்பைகள்
ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் உருவாகின்றன. இதில்
60 ஆயிரம் டன் இ-குப்பைகள் நைஜீரியாவில் கொட்டப்பட்டுள்ளது
என்பதை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஏஜன்சி மற்றும் ஜெர்மனியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார
ஒருங்கிணைப்பு அமைச்சகம் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இக்கழிவுகளில் 77 சதவிகிதம் ஐரோப்பாவிலிருந்தும் மீதி
அமெரிக்கா, சீனாவிலிருந்தும் வருகிறது.
அமெரிக்கா ஒரு
ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புக்கு எலக்ட்ரானிக் பொருட்களை அதி நுகர்வு செய்யும் தேசமாக
முதலிடத்திலும் அடுத்த இடத்தில் ஐரோப்பாவும் உள்ளது. இ-குப்பைகளில் மெர்க்குரி, காட்மியம், லெட் ஆகிய நச்சுகள் சூழலுக்கு கேடு விளைவிப்பன என்றாலும் ஏழை நாடுகள் பலவற்றிலும்
பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு எதிரான தடுக்கும் வகையிலான கிடுக்குப்பிடி சட்டங்கள்
கிடையாது. இக்கழிவுகளை இறக்குமதி செய்யும் சாக்கில் புதிய எலக்ட்ரானிக்
பொருட்களையும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்துகிறார்கள். எலக்ட்ரிக்
பொருட்களின் ஆயுள் குறைவாகவும், எளிதில் பழுதுபார்க்க முடியாததாகவும்
இருப்பது இ-குப்பைகளின் அளவை அதிகரித்து வருகிறது.