இடுகைகள்

உதய்கிரண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாண வீடியோ தரத்தில் பழிக்குப்பழி கதை!

படம்
        ஜெய்ஶ்ரீராம் உதய்கிரண், ரேஷ்மா நேர்மையான இன்ஸ்பெக்டர் ஒருவரை அரசியல்வாதிகள், ரவுடிகள், போலீஸ் கமிஷனர் என அனைவரும் கூட்டாக ரவுண்ட் கட்டி அடித்து ஒரு இடத்தில் சிறைப்படுத்துகிறார்கள். அங்கிருந்து தப்புபவர், எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை. படம் பரிதாபமான தரத்தில் உள்ளது. ஏறத்தாழ கல்யாண வீடியோ என்றே கூறலாம். இதில் வரும் எடிட்டிங்கை விட தரமாக இன்று கல்யாண வீடியோவை எடிட் செய்கிறார்கள். உண்மையில் இது படமா, அல்லது டெலி ஃபிலிமா, சீரியலா என்று கூட பார்வையாளர்களுக்கு சந்தேகம் வரும். சன்டிவி சீரியலில் மையப் பாத்திரத்திற்கு அதிர்ச்சி ஆனால், அந்தக் காட்சி அப்படியே ஒருவரின் சட்டையைப் பிடித்து உலுக்கியது போல குலுங்கும் அல்லவா, அதே டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற கண்றாவியைப் பார்த்து  என்ன சொல்வது என்று தெரியாமல், உதய் கிரணின் ரசிகர்கள், அவர் இறந்துபோனதற்கு யார் காரணம், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றெல்லாம் பேசி கமெண்டில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். படத்தில் ஹரிஷ் கல்யாண் வில்லன்களில் ஒருவராக வருகிறார். அவர்தான் நாயகனின் அப்பா, தங...