நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!
அல்டிமேட் சீக்ரெட் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை. சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான். இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை...