இடுகைகள்

ஆவணப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆவணப்படங்களை தரமாக உருவாக்கி விருதுகளைப் பெறும் இந்தியர்கள்!

படம்
  ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் உலக அளவில் கவனம் பெற்ற இந்திய ஆவணப்படங்கள் தி சினிமா டிராவலர்ஸ் ஷிர்லி ஆப்ரஹாம் – அமித் மாதேஷியா சிறப்பு தங்க கண் விருது, கேன்ஸ் 2016 விவேக் – ஆனந்த் பட்வர்த்தன் சிறந்த ஆவணப்பட விருது- 2018ஆம் ஆண்டு   ஐடிஎஃப்ஏ, நெதர்லாந்து எ நைட் ஆஃப் நோயிங் நத்திங் பாயல் கபாடியா சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது கேன்ஸ் 2021 ஆம்ப்ளிஃபை   வாய்சஸ் விருது, 2021 ரைட்டிங் வித் ஃபயர் ரின்டு தாமஸ் – சுஸ்மித் கோஷ் உலக சினிமா ஆவணப்படம் – பார்வையாளர்கள் விருது, தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான விருது, சிறப்பு ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2021, பார்வையாளர்கள் விருது, ஐடிஎஃப்ஏ தி நெதர்லாந்து 2021, சிறந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்ட ஆவணப்படம் 2022 வொய்ல் வீ வாட்ச்டு வினய் சுக்லா ஆம்ப்ளிஃபை வாய்சஸ் விருது டிஐஎஃப்எஃப் 2022 ஆல் தட் பிரீத்ஸ் சௌனாக் சென் உலக சினிமா ஆவணப்படம் – கிராண்ட் ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2022, சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது, கேன்ஸ் 2022, சிறந்த ஆவணப்பட விருதுக்கான பரிந்துரை, ஆஸ்கர் விருது, 2023 தி எலிபன

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

படம்
              படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள் ! கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள் . அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார் . வரவர ராவ் , சுதா பரத்வாஜ் , ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது . பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார் . க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார் . அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது , சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார் . 2017 இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது , அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து . அது மோசமான காலகட்டமாக இருந்தது . வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார் . அம்பேத்கர் , பெரியார் , கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட

எது எப்படியோ அப்படியே.... நடந்தது - மா ஆனந்த் ஷீலா -

படம்
         மா ஷீலா   இந்தியாவிலுள்ள புனேவில் பிறந்த ரஜ்னீஷ் எனும் ஓஷோவை யாரும் மறக்க முடியாது . அவர் 1981 இல் அமெரிக்காவின் ஒரேகான் நகருக்கு செல்ல விரும்பினார் . இதற்கு பின்னணியில் அவரது உதவியாளர் மா ஆனந்த் ஷீலா இருந்தார் . இவர் அங்கு ரஜ்னீஷ்புரத்தை உருவாக்கினார் . பின்னாளில் பல்வேறு புகார்கள் குவிய , ஷீலாவுக்கு சிறைதண்டனை கிடைத்தது . அதிலிருந்து மீண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார் . இவரைப் பற்றி நெட்பிளிக்சில் சர்ச்சிங் ஷீலா என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார் ஷீலா . அவரிடம் பேசினோம் . இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வரும் நோக்கம் என்ன ? இறைவனின் விருப்பம் என்று கூறலாம் . இதற்கு முன்னரும் நான் நிறைய முறை இந்தியாவுக்கு வர விரு்ம்பினேன் . குஜராத் அல்லது பரோடாவுக்கு செல்ல மட்டும் விரும்பவில்லை . எனது வேருக்கு நான் செல்ல விரும்பினேன் . இதை சொல்வது வேடிக்கையாக இருக்கலாம் . இதனை நீங்கள் ஆவணப்படத்தில் பார்ப்பீர்கள் . இங்கு சந்தித்த மனிதர்கள் சுவிட்சர்லாந்தில் சந்தித்த மனிதர்களை விட வேறுபட்

பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!

படம்
போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம். இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது? என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிப