இடுகைகள்

ரோனி அதகளம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாஸ்ய பக்கங்கள்!

படம்
செல்ஃபீ வித் பசுமாடு! ஹரியானாவில் அமைக்கப்பட்ட பசு ஹாஸ்டல்களுக்கு அடுத்து , கொல்கத்தாவில் அடுத்த பசுநேச பிளானாக , பசுவோடு ஒரு செல்ஃபீ திட்டத்தை என்ஜிஓ ஒன்று முன்னெடுத்துள்ளது . கோசேவா பரிவார் அமைப்பு , யூத்களிடையே செல்ஃபீ போட்டி வரவேற்பு பிரமாதம் என பூரிக்கின்றனர் . 2015 ஆம் ஆண்டிலிருந்து கோமாதாக்களுக்கான அசகாய போட்டியை நடத்திவரும் இவ்வமைப்பு , பசு வெறும் இறைச்சிக்கானவை மட்டுமல்ல என்பதை கொள்கையாக கொண்டது . " பசு பாதுகாப்பை மதம் அல்லது அரசியலோடு இணைத்து பார்ப்பது தவறு . சமூக மற்றும் அறிவியல் துறைகளில் பசுக்களுக்கு பெரும் பங்குண்டு " என புரியாத புதிராக பேசுகிறார் கோசேவா பரிவார் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக்பிரதாப் சிங் . கோசேவா ஆப்பை டவுன்லோடு செய்து செல்ஃபீ படத்தை அப்லோட் செய்து பசுக்களை காக்கும் வசதியுண்டு . 2 அமெரிக்காவில் கிம் ! வடகொரியா அதிபர் கிம்முக்கும் , அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நடந்து வரும் வார்த்தைப் போர்கள் உலகப்பிரசித்தம் . இந்நிலையில் கிம் திடீரென நியூயார்க்கில் ட்ரம்ப் டவருக்கு வந்து கதவைத் தட்டி ட்ரம்பின் நலம் விசாரித்தால் எப்படியிர

ரோனி பக்கங்கள்!

படம்
டாய்லெட்டில் தங்கம்! இங்கிலாந்து ட்ரைனேஜில் எண்ணெய் கட்டிகள் குழாயை அடைக்கின்றன என்றால் ஸ்விட்சர்லாந்தில் டன்கணக்கில் தங்கம் , வெள்ளி டாய்லெட்டில் கிடக்கின்றன . குண்டுமணி தங்கம் வாங்க ஆஃபர் கேட்டு பில் கம்பேர் செய்து நாயாய் அலைந்தும் பைசா பிரயோஜனமில்லை . ஸ்விஸ்ஸில் மட்டும் எப்படி ? ஸ்விஸ்ஸிலுள்ள ஜூரா பகுதி ட்ரைனேஜ் குழாய்களில் கடந்த ஆண்டு  43 கி . கி தங்கம் , 3 டன் வெள்ளி பெறப்பட்டது உண்மை . மதிப்பு 3.1 மில்லியன் டாலர்கள் . உடனே ட்ரைனேஜ் குழாய்களில் இறங்கிவிடாதீர்கள் . வாட்ச் , கெமிக்கல் மற்றும் மருந்துகம்பெனிகளின் கழிவுகளிலிருந்து கிடைத்த மைக்ரோகிராம் உலோகங்களின் அளவு இது . தொழில்நிறுவனங்கள் உலோகங்களை உருக்கி பயன்படுத்த முடியாத அளவு என்பதால் இதனை கழிவாக அனுப்பிவிடுகின்றனர் . செய்தியில் தங்கம் பற்றிய செய்தியைக் கேட்ட ஆசை விடாத மக்கள் தங்கவேட்டையை தங்கள் குடிநீர் குழாயிலும் தொடர்ந்து வருகின்றனர் . 2 மைனஸ் பிளஸ் மைனஸ் அமைச்சர் ! ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு கல்வி ஆபீசர் டீம் வருகிறதென்றால் , முன்னமே டீட்டெய்ல் தெரிந்துகொண்டு , பிரியாணி சமைத்து காத்திருப்பது

ரோனி பக்கங்கள்!

படம்
புலிக்கு கரன்சி டிஃபன் ! அனிமல்சிடமும் ஆணவமாக நடந்துகொண்டால் என்னாகும் என்பதற்கு சீனா மனிதர்தான் உதாரண புருஷர் . சீனாவின் ஹீனானிலுள்ள ஜிங்ஸிகுவான் சர்க்கஸூக்கு ஜாலி விசிட் அடித்த 65 வயதான பாய் அன்று செம சரக்கு . ஆள் சைலண்டாக இருந்தாலும் பிளட்டில் கலந்த சரக்கு சும்மா விடுமா ? புலிக்கூண்டுக்கு டைரக்ட்டாக சென்ற பாய் , பாக்கெட்டிலிருந்து பணக்கட்டை எடுத்து புலியிடம் முரட்டு பாசமாக சாப்பிடச்சொல்லி வாயில் இடித்தார் . நோட்டுகளை அலட்சியமாக மென்ற புலி , பாயின் விரல்களை ஆர்வமாக கடிக்கத்தொடங்கியும் பாய் சுதாரிக்கவில்லை . ' பச்சாவ் ' என ரத்தம் கொட்ட அலறியவரை சர்க்கஸ் கம்பெனி ஆட்கள் மீட்டபோது கடிபட்ட இருவிரல்களில் மோதிரவிரல் மிஸ்ஸிங் . தற்போது ஹாஸ்பிடலில் பேண்டேஜோடு ஆஜராகியிருக்கிறார் பாய் . அஞ்சாத ராஜூ பாய் ! நாட்டில் குடியேற அரசு தருகிறது மானியம் ! அழகிய மலைத்தொடரில் காதைப் பிளக்கும் ஹார்ன் சத்தமின்றி வாழ பலருக்கும் ஆசைதான் . டப்பு இல்லாதவர்களுக்கு இது சாத்தியமா ? சாத்தியம்தான் . எங்கள் மலைக்கிராமத்தில் வந்து தங்குங்களேன் என மக்களை தாம்பூலத்தட்டில் பணம்

ரோனி பக்கங்கள்!

படம்
ஜஸ்ட் பாஸ் சல்மான் ! ஆதார் கார்டு , ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில்  காஜல் , ரஜினி சிரிப்பது இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது . ஆனால் காலேஜில் தரும் மார்க்‌ஷீட்டில் அப்படி குளறுபடி நடந்தால் எக்ஸாம் எழுதியவரின் நிலைமை என்ன ? அப்படித்தான் அலிகாரிலுள்ள அம்ரத்தா சிங் நினைவு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்த மாணவர் ஒருவரின் மார்க்‌ஷீட்டில் சின்ன குளறுபடி . மார்க் ஷீட்டில் மாணவரின் போட்டோ மிஸ்ஸாகி கெத்தான சல்மான்கான் படத்துடன் பாஸ்மார்க் 35% என வெளியானதுதான் ஆக்ரா யுனிவர்சிட்டி , ' மானம் போச்சே ' என தலைகுனிய காரணம் . " மார்க்‌ஷீட்டை பிரிண்ட் செய்ய அவுட்சோர்ஸ் செய்வதுதான் இந்த தவறுக்கு காரணம் . இதற்கு முன்பு ராகுல்காந்தி படம் , அம்பேத்கர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது " என்கிறார் பல்கலை வட்டார மனிதர் . ஆக்ரா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் 7.2 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் தேர்வு எழுதியுள்ளனர் . ஷாரூக்கானுக்கும் சான்ஸ் கொடுங்க ப்ரோ !    ஸ்நாக்ஸ் கடத்தல் !  ஃபேவரிட் படத்துக்கு புக் செய்து தியேட்டருக்குள் செல்லும்போது பசிக்குமே என சுண்டல் , ஆலு பூஜி