இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டியல் - விநோதரச மஞ்சரி

படம்
  பட்டியல் தியோடர் சியஸ் கெய்சென் என அழைக்கப்படும் டாக்டர் சியஸ், தனது லோரக்ஸ் நாவலை கென்யன் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து யானைக்கூட்டத்தை பார்த்தபடியே எழுதி முடித்தார். எழுத பயன்படுத்திய காகிதம், சலவை துணிகளின் பட்டியல் காகிதம்.   1907ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எழுத்தாளர் எட்மண்ட் மோரிஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விருந்து உண்ண வரும் விருந்தினர் பட்டியலைக் கவனித்தார். அதில்   நோபல் பரிசு வென்றவர், கலாசாரவாதி, வரலாற்று அறிஞர், கட்டுரையாளர், சுயசரிதையாளர், மானுடவியலாளர், குடிமைச்சமூக சீர்திருத்தவாதி, சமூக செயல்பாட்டாளர், நியூயார்க் நகர முன்னாள் ஆளுநர் என பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருந்த ஒரே பெயர் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்கா வியட்நாம் போரில் தோற்றுப்போனது. அதில் இறந்துபோனவர்களுக்கான நினைவகம் வாஷிங்டனில் உள்ளது. அதில், இறந்து அல்லது காணாமல் போனவர்கள் என 58 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளன. அதற்கான நிதியகத்தில் 38 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்காவில் முதன்முதலில் சிகாகோவில்தான் வெளியிடப்பட்டது. இத

பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

படம்
  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன. அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை. 2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்   உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர். நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகிறார். தீர

கையெழுத்து - விநோதரச மஞ்சரி

படம்
  துணுக்குகள்   தன் கையெழுத்துக்கு கீழே ஒருவர் உருவாக்கும் குறியீடு அல்லது அடையாளத்திற்கு பாரப் (Paraph) என்று பெயர். அமெரிக்க   வரலாற்றிலேயே அரசியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி புகழ்பெற்றவர், ஜோசப் கோசெய் (Joseph Cosey). இவர், முன்னாள் அமெரிக்க அதிபர்   ஆபிரகாம் லிங்கன், கவிஞர் மார்க் ட்வைன் தொடங்கி அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தை எழுதி வெளியிட்ட தாமஸ் ஜெஃபர்சன் வரை போலி கையெழுத்துகளை உருவாக்கினார். பின்னாளில், ஜோசப்பின் போலி கையெழுத்துகள், சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட வினோதமும் நடந்தது. அமெரிக்காவின் சிகோகோவைச் சேர்ந்த நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர்   நெல்சன் ஆல்கிரென் (Nelson Algren), தனது புத்தக வாசகர்களுக்கு கையெழுத்து போடும்போது கூடவே பூனையின் படத்தையும் வரைவது வழக்கம். 1948ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்துகளை சேகரிப்பதற்கான முதல் அமைப்பாக‘தேசிய கையெழுத்து சேகரிப்பாளர் சங்கம்’ (National Society of Autograph Collectors) தொடங்கப்பட்டது. இதில், உறுப்பினராக விரும்புபவர் தீவிரமான வரலாற்று ஆய

தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

படம்
  ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது.   பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆ

அமெரிக்கா கைவிட விரும்பாத போர்விமானம் எஃப் 35!

படம்
  உலக நாடுகள் வாங்க விரும்பும் போர் விமானம்-எஃப் 35   அமெரிக்க அரசு, 1.7 ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கி எஃப் 35 போர்விமானத்தை தயாரிக்க லோக்கீது மார்ட்டின் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படியென்ன சிறப்பு அம்சம் இந்த விமானத்தில் உள்ளது? சிரியாவுக்கு ரஷ்ய ரேடார்கள் கண்டுபிடிக்காமல் சென்று வரமுடியும். பசிஃபிக் கடலுக்கு சீனாவின் அச்சுறுத்தலின்றி சென்று இறங்கலாம். விமானம், இலக்கு, ஆயுதங்கள் பற்றிய விவரங்கள், நிலைய கட்டுப்பாடு இதெல்லாம் விமானி அணிந்துள்ள ஹெல்மெட்   கண்ணாடி வழியாக பார்க்கலாம். தனியாக கீழே குனிந்து மீட்டர்களை ரேடாரை பார்க்க வேண்டுமென்பதில்லை. போர் பற்றிய தகவல்களை விமானத்தில் இருந்தே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் நேசப்படைகளுக்கும் எளிதாக பகிர முடியும். மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். விமானி, காக்பிட்டில் உள்ள கருவிகளை, எந்திரங்களை பேச்சு மூலமே இயக்கலாம். இதில், 20 ஆயிரம் பவுண்டு எடையுள்ள ஆயுதங்களைக் கொண்டு செல்லலாம். சைபர் தாக்குதல்களுக்கு மசியாது. ரஷ்யாவின் ரேடாரில் விமானம் தெரியாது. அடுத்த போர் என உலக நாடுகளுக்கு இடையில் நடந்தால்   அதில் எஃப் 35 இருக்

யதார்த்த நீதியை சொல்லும் நீதிக்கதைகள்! - நிஜம் நீதி - சுஜாதா

படம்
  நிஜம் நீதி சுஜாதா 73 பக்கங்கள் நக்கீரன் பதிப்பகம்   பஞ்சதந்திர கதைகளை படித்திருப்போம். அதில் நிறைய நீதிகளை அறிந்திருப்போம். அந்த கதைகளை, காலத்திற்கு ஏற்ப சற்று மேம்படுத்தி பார்த்து நீதிகளை அறிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த நூல். முதல் கதையே சுஜாதாவின் குறும்பான   எழுத்தில் ஜிம்மியும் கடவுளும் என்ற தலைப்பில் தொடங்குகிறது. அதற்குப்பிறகு, நூலை நீங்கள் கீழே வைக்க வைக்க மாட்டீர்கள். அந்தளவு கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது. கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. வயது வந்தவர்களுக்கானவை. இதைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும். செயல்படுபவர்கள் பேசமாட்டார்கள், சில துரோகங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதில்லை, மோசடிகளை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிடும் என்ற கதைகள், எழுதப்பட்டவிதத்தில் மனம் கவருபவையாக உள்ளது. இந்த நூலை, காலம்தோறும் சற்று மாற்றி எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். ஏனெனில் காலம்தோறும் பிழைப்பதற்கான விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை வைத்து இதுபோல நிறைய கதைகளை எழுதலாம். உண்மையில் இன்றுள்ள சூழலுக்கு ஏற்ற கதை என எறும்பு, புறா கதையையும், தவளையை இரைய

கிராஃபிக் டிசைனரைக் காதலிக்கும் பூனை இளைஞன்! மியாவ் தி சீக்ரெட் பாய் - கே டிராமா

படம்
  மியாவ், தி சீக்ரெட் பாய் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   இந்த கொரிய தொடர், எப்போதும் கொரிய தொடர்களில் உள்ள வன்முறை, பள்ளி சித்திரவதை,  பெற்றோர் செய்யும் பாலியல் வன்முறை, அடி உதை என ஏதும் இல்லாதது. சற்று நீளமாக இருந்தாலும் நிதானமாக பார்த்தால் மெல்ல அதன் தன்மைக்கு பழகிவிடுவீர்கள். நகரத்தில் உள்ள மனிதர்களால் தாங்க முடியாத தனிமைக்கு ஆதரவாக செல்லப்பிராணிகள் இருக்கிறார்கள். உண்மையில் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை காதலிக்கும் தனிநபர்களே அதிகமாகி வருகிறார்கள். இதைபற்றிய கற்பனைக் கதைதான் மியாவ், எ சீக்ரெட் பாய். ஒருவர் தன்னோடு சந்தோஷத்திலும் துக்கத்திலும் இருக்கும்போது கூடவே ஆதரவாக இருக்கும் பூனை ஒன்றை காதலிக்க தொட்ங்கினால் எப்படியிருக்கும்? அந்த பூனை, வளர்ப்பவரின் உடல் மணம் கொண்ட ஏதாவது பொருள் உடலில் பட்டாலே மனித உருவம் கொள்கிறது. தன்னை வளர்ப்பவரை அதீதமாக காதலிக்கத் தொடங்குகிறது. பாதுகாக்கத் தொடங்குகிறது. தொடரில் வரும் கிராஃபிக் டிசைனர் பெண்ணான கிம் சோல் ஆ, தனியாக அறையில் வாழ்ந்து வருகிறாள். அதே நகரில் அவளது கவிஞரான அப்பா, தனியாக உட்கார்ந்து நூல்களை படித்தபடி காலத்தை கழிக்கிறார். ஆனால்,

சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை

படம்
  அமெரிக்காவில் இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர் கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும் க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். சால்மன் சாலிஸ் தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர் சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன் அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும் குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொ

செயற்கை நுண்ணறிவு ஆய்விலும், வணிகப்படுத்துதலிலும் தடுமாறும் கூகுள்!

படம்
  சுந்தர்பிச்சை, இயக்குநர், கூகுள் 2016ஆம் ஆண்டே கூகுள், செயற்கை நுண்ணறிவு பாதை பற்றிய   அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. ஆனால் செயல்பாடு என்ற வகையில் பின்தங்கிவிட்டது. எனவே, சாட்ஜிபிடி மைக்ரோசாப்டின் முதலீட்டைப் பெற்று முதலில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதனால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது கூகுளின் இயக்குநர் சுந்தர் பிச்சைதான். அமெரிக்க டெக் நிறுவனங்களின் வசீகர இயக்குநர்கள் என்று சொல்லும் எந்த அம்சங்களும் இல்லாத அகவயமான தலைவர், சுந்தர். திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதில் காட்டிய தீவிரம் அவரை தலைவராக்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என யாருடைய மக்கள் செல்வாக்குக்கும் எதிராக சுந்தரை நிறுத்தமுடியாது. கூகுளின் ஐஓ மாநாட்டில் கூகுள் மெயிலுக்கு ஹெல்ப் மீ ரைட் எனும் வசதி, கூகுள் மேப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் 3 டியில் பார்ப்பது, புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் செம்மைபடுத்துவது, கூகுள் பார்ட் எனும் சாட் ஜிபிடிக்கு போட்டியானசெயற்கை நுண்ணறிவு, அதற்கான பால்ம் 2 எனும் லாங்குவேஜ் மாடல்   என ஏராளமான விஷயங்களை பேசினார்கள். ஆனால், பலரும் தெரிந்துகொள்ள விரும்பியது. கூகுள

ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!

படம்
    மனித கால்குலேட்டர்களுக்கு இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன. கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும் சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம் தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள். உணவகங்களில் மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. தேவையானபோது குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும் வேலை. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக்டால என்ற

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில ம

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்கு, 2.4 பில்லி

தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

படம்
  தெரிஞ்சுக்கோ – விளையாட்டு   டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே. ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும். குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள். 1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற   ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது.   பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.   நூல் இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ்” என்ற நூலின் 6,904   ப