வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

 








வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு

தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி  மக்களை வதைத்தது.

இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.  இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது.

2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவுப்பயிர்கள் 50 சதவீதம் அழிந்தன. 2022ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்யத்தில் காய்கறிகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2040ஆம் ஆண்டு இப்போதுள்ளதை விட வெப்ப அலை தாக்குதல்கள் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கனடாவின் பசிஃபிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக கடல் உயிரினங்கள் இறந்துவிட்டன. பொதுவாக நிலத்திலுள்ள மனிதர்கள், செடிகள், கொடிகள்  அழிவைப் பற்றி மட்டுமே  கவலைப்படுகின்றனர். ஒப்பீட்டளவில் கடலில் ஏற்படும் பாதிப்புகளை பலரும் அடையாளம் காண்பதில்லை. கடலில் உள்ள வளங்கள்தான் உலக நாடுகளிலுள்ள 500 மில்லியன் மக்களைக் காக்கிறது. அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கிறது.

கொலம்பியாவின் மெடலினில் உருவாக்கப்பட்ட பசுமை பரப்பு போல உலக நாடுகளிலும் உருவாக்கப்பட்டால் வெப்ப அலை பாதிப்புகளை குறைக்கலாம் என சூழல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இது எந்தளவுக்கு நடைமுறையில் பயன்கொடுக்கும் என்று தெரியவில்லை.

போப் வெஸ்டன்

கார்டியன் வீக்லி

image -Pinterest

கருத்துகள்