இடுகைகள்

வேறுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிமெண்ட், கான்க்ரீட் வேறுபாடு என்ன?

படம்
  சிமெண்ட் கால்சியம், சிலிகன், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் கலவையே சிமெண்ட். இக்கலவையை  அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது,பாறையை ஒத்த கடினமான பொருளாகிறது. இதை அரைத்து பொடியாக்கினால், அதுதான் வீடுகட்டப் பயன்படுத்தும் சிமெண்ட்.சிமெண்டை முதலில் பயன்படுத்தியவர்கள், மாசிடோனியர்கள். பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரோமானியர்கள் பயன்படுத்தினர். இவர்கள் வேசிவியஸ் (Mount Vesuvius)எரிமலையில் கிடைத்த சாம்பலையும் , சுண்ணாம்புக்கல்லோடு கலந்து பயன்படுத்தினர். நாம் பயன்படுத்தும் சிமெண்டில் எரிமலை சாம்பலுக்கு பதிலாக நிலக்கரியை எரித்துப் பெறும் எரிசாம்பலைப் பயன்படுத்துகின்றனர்.   சுண்ணாம்புக்கல், வண்டல் மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பதை முதலில் உருவாக்கியவர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் (Joseph Aspdin). 1817இல் போர்ட்லேண்ட் சிமெண்டை உருவாக்கும் பரிசோதனைகளை செய்தார். அதில் வெற்றிகண்டவர், 1824ஆம் ஆண்டு தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பதிவு செய்தார்.  கான்க்ரீட் இதில் மணல், சரளைக்கற்கள், நீர் ஆகியவற்றோடு சிமெண்ட்டை கலக்கி பசைபோலாக்கினால்  அதன் பெயர்தான், கா

பெருகும் பெண்கள் மீதான வெறுப்பும், பாகுபாடும்!

பெண்களுக்கு எத்துறையானாலும் அத்துறையில் உள்ளவர்களே ஆணோ, பெண்ணோ முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். அப்படி இருப்பதில் அவர்களது மனதில் கெட்டிதட்டிப்போன பழமைவாதக் கருத்துகள் முக்கியக் காரணம். அப்படிப்பட்ட கருத்துகள் இப்போது மாறியிருக்குமா என்ற எண்ணத்தில் ஐ.நா சபை  எடுத்த ஆய்வு முடிகள் இதோ உலகில் பத்தில் ஒன்பது பேர் பெண்கள் பற்றிய பழமைவாத முன்முடிவுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் பெண் தலைவர்களும் அடங்குவர். பெண்கள் சிறப்பாக செயற்பட்டாலும் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி முதல் வேலைவாய்ப்புகள் வரை திறமை இருக்கிறதோ இல்லையோ ஆண்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. பார்ட்டியில் அறையும் கணவரை விவாகரத்து செய்யும் விவகாரத்தைப் பற்றி தப்பட் என்ற இந்திப்படம் பேசுகிறது. பெண்களை கணவர்கள் அடிப்பதும், உதைப்பதும் தவறு இல்லை என 28 சதவீதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பாகிஸ்தான், நைஜீரியா, கத்தார் ஆகிய நாடுகளில் பெண்கள் மீதான பாகுபாடும் கட்டுப்பாடும் 90 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் இந்த சதவீதம் 50-60 சதவீதமாக உள்ளது. 

சூப்பர்ஸ்டோர் என்றால் என்ன பொருள் தெரியுமா?

படம்
காய்கறிக்கடை Vs சிறப்பங்காடி என்ன வேறுபாடு உள்ளது? இன்று இதுபோல நிறைய வேறுபாடுகள் உண்டு. இன்று மருந்தகங்களில் பல்பொருள் அங்காடியில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை விற்கத்தொடங்கிவிட்டனர். என்ன காரணம்? மக்களின் தேவை அப்படி உள்ளது. காய்கறிக்கடையிலும் இன்று குளிர்பானங்கள், பழச்சாறு, பருப்புகள் விற்கத்தொடங்கிவிட்டனர். சிறப்பங்காடி என்பது, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், வீட்டைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள் ஆகியவை இருக்கும். இதில் சூப்பர்ஸ்டோர் என்பது நீங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கான அனைத்து பொருட்களும் இருக்கும். ஏறத்தாழ வீட்டைக் கட்டுவதற்கான பொருட்களும் கூட இங்கு விற்கப்படும். இன்று ஹைபர் மார்க்கெட்டுகள் மளிகை, காய்கறி, இறைச்சி பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்குகள், துணிகள், செருப்புகள் நோட்டுபுத்தகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு என அனைத்துமே இங்கு இருக்கும். காய்கறிக்கடை என்பது தினசரி பயன்பாட்டிற்கானது. ஆனால் சூப்பர் ஸ்டோர் என்பது சிறப்பங்காடிகளைவிட அளவில், பொருட்களின் எண்ணிக்கையிலும் பெரிது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்

அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!

படம்
அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்! டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஆராய்ச்சியாளர்கள் குழு 27 டிகிரி முதல் -196 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிராபீன் டாட்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டர் இது. இதில் மைக்ரோ கெல்வின் அளவிலான மாறுதலையும் கண்டுபிடிக்க முடியும். இந்த தெர்மோமீட்டரை ஷேக் எஸ் இஸ்லாம் என்ற நானோசயின்ஸ்  தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த இயக்குநர் தலைமையிலான குழு கண்டுபிடித்திருக்கிறது. செல்சியஸ் வெப்பநிலையில் மாறும் மாறுதல்களை 300 மில்லி செகண்ட்ஸ் வேறுபாட்டில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இது. ஓராண்டில் ஏறத்தாழ 50 சுழற்சி முறைகள் உண்டு. இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் முறையில் தெர்மோமீட்டர் செயல்படுகிறது. நன்றி: நானோஸ்கேல் அட்வான்சஸ் படம் - செய்தி: தி இந்து