இடுகைகள்

பட்டுச்சாலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

படம்
  பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம்.  பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.  பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...