சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம்.
சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது.
2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந்து மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச்சென்றனர். ஆனால், அப்படி செல்வதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது, உடன்படிக்கை, ஒப்பந்தம், என ஆதரவான நட்பு நாடுகளில் மட்டுமே கல்வி கற்க முடியும். 1950களில் சீன மாணவர்களுக்கு சோவியத் ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நட்பு நாடுகளில் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
1970ஆம் ஆண்டுவாக்கில் சீனா, உதவித்தொகையை வழங்கி பல்வேறு நாடுகளுக்கு மாணவர்களை அனுப்பியது. இதில் ஜப்பானும் அடக்கம். 1980ஆம் ஆண்டுக்கு பிறகு தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பத் தொடங்கியது.
2008-2018 என்ற காலகட்டத்தில், வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது. தொண்ணூறுகளில் வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கான விதிகள் தளர்வு செய்யப்பட்டன. இதன் விளைவாக, ஆண்டுதோறும் அயல்நாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொடக்க காலத்தில் சீனாவில் இருந்து வெளிநாட்டிற்கு கல்வி கற்கச் சென்றவர்கள். அங்கேயே வேலை செய்துகொண்டு தங்கிவிட்டனர். டெங்கின் காலத்தில், கல்வி கற்கச் சென்றவர்களில் பத்து சதவீதம் திரும்பினால் கூட நாடு நிறைய பயன்களைப் பெறும் என்று கூறினார். மாணவர்கள் சீனாவுக்கு திரும்பி வராததற்கு காரணம், தாய்நாட்டில் சரியான வேலைவாய்ப்புகள் இன்மை, உற்பத்திதுறை வளர்ச்சியின்மையே ஆகும். இதை அடையாளம் கண்ட சீன அரசு, படித்துவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பும் மாணவர்களுக்கு மானிய உதவிகளை ஏராளமாக வழங்கத் தொடங்கியது. இதனால், மாணவர் புதிய வேலை தேடலாம். அல்லது தொழில் தொடங்கலாம்.
சீனாவில் இருந்து மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் படித்துவிட்டு சொந்த நாட்டுக்கே திரும்பி வரவேண்டும் என அரசு நினைத்தது. ஆனால், எதிர்பார்த்தமாதிரி செயல்பாடுகள் நடைபெறவில்லை. மாணவர்கள் வெளிநாடுகளில் சாதித்த சாதனைகளுக்கு ஏற்ப அரசு அவர்களுக்கு பரிசளிக்க முயன்றது. உள்நாட்டில் பணிவாய்ப்பு, சம்பளம், அந்தஸ்து ஆகியவற்றைக் கூறலாம்.
சீனாவில், அறுபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டில் மட்டும் 205 நாடுகளைச் சேர்ந்த நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதாக தகவல் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு, பிற நாட்டு மாணவர்கள், அங்கு வந்து கல்வி பயில்வதை பெருமையாக கருதுகிறது. சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுக்க பரவுவதை உலக நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து பயில்வதைக் காட்டுகிறது. கல்வி கற்க வரும் மாணவர்கள் கல்வியோடு சீனமொழி, அதன் கலாசாரம், பெருமை ஆகியவற்றையும் பயில்கிறார்கள். தங்களோடு பூர்விக நாட்டிற்கு கொண்டு செல்கிறார்கள். இதை சீன அரசு புரிந்துகொண்டுள்ளது.
கன்பூசியஸ் கழகங்களை உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைப்பது, உள்நாட்டு கணித ஆசிரியர்களை உலகமெங்கும் அனுப்புவது, சீன பள்ளிகளின் கிளைகளை பல்வேற நாடுகளில் அமைப்பது, பட்டுச்சாலை கல்வித்திட்டங்கள் என சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் பலவீனமாகி வரும் சூழலில், சீனா தனது திட்டத்தில் வெற்றியும் பெற்று வருகிறது.
2017ஆம் ஆண்டு சீன அரசு, கன்பூசியஸ் கழகங்களை தொடங்கி அதன் வழியாக சீனமொழி, கலாசாரத்தை பிற நாடுகளுக்கு பிரசாரம் செய்யும் பணியைத் தொடங்கியது. உலகளவில் 42 நாடுகளில் கன்பூசியஸ் கழகம் இயங்கி வருகிறது. இந்த கழகம், சீனாவை பிராண்டாக விளம்பரப்படுத்துவதோடு உயர்கல்வியைப் பற்றிய கவனத்தையும் உருவாக்கி வருகிறது. கல்விக்கான அடையாளமாக மாற்றிக்கொண்டுள்ளது.
சீனாவில் கற்பிக்கப்படும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பாடங்களைப் பார்ப்போம். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியகீதம், தேசியக்கொடி, இலச்சினைகளை அடையாளம் காணுதல் முக்கியமான பாடம். அதற்கு மரியாதை செலுத்த கற்றுத்தரப்படுகிறது.
மூன்றாவது முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீனாவில் புவியியல், அண்மைய நாட்டின் மேம்பாடுகள், அரசியல், சீனாவின் குடியேற்ற சாதனைகள், உலகிற்கான சீன பங்களிப்பு பற்றிய பாடங்கள் அணிவகுக்கின்றன.
ஏழாவது, ஒன்பதாவது வகுப்பினருக்கு, சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை விளக்குதல், சோசலிசம் பற்றிய விளக்கம், சீனாவின் கலாசாரம் பற்றிய விளக்கங்கள் கூறப்படுகின்றன. இதோடு சுயநம்பிக்கை, பிறருக்கு கொடுக்கவேண்டிய மரியாதை, சமூக பொறுப்புணர்வு, குடும்பத்திற்கான பொறுப்புகள், கடமைகள் பற்றியும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
பாடங்களைக் கடந்து, சீன குடிமகனாக இருப்பதற்கு பெருமைப்படுவது என்பது இதில் முக்கிய அங்கம். 2009ஆம் ஆண்டு தொடங்கியே சீனாவின் தேசியவாத பெருமை பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை விரும்பி போராடுபவர்களுக்கு எதிராக தேசியவாத பெருமை பிரசாரம் இயங்குகிறது.
1989ஆம் ஆண்டு தியானன்மன் சதுக்க கிளர்ச்சிக்குப் பிறகு, தேசியவாத பிரசாரம் தொடங்கப்பட்டது. பொதுவுடைமைக் கட்சி சீனாவில் தனிநபர் அடையாளத்தை விட கூட்டு அடையாளத்தை முக்கியமாக கருதுகிறது.
பொதுவுடைமைக் கட்சியின் சாதனைகளை பார்வையிடுவது பள்ளி, கல்லூரிகளில் முக்கியமான பணி. அந்த வகையில் ராணுவ தளங்களை பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்கிறார்கள். வெளிநாட்டு சக்திகளால் சீனா பாதிக்கப்பட்டு அடிமையாக இருந்ததை அடிப்படையாக வைத்து தேசப்பற்று பிரசாரம் செய்யப்படுகிறது.



கருத்துகள்
கருத்துரையிடுக