டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் - இஸ்மானே எலோஃபி, பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன்
டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்
இஸ்மானே எலோஃபி
உலகமெங்கும் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் தடுமாறி வரும்போது, சிஜிஐஏஆர் அமைப்பின் வழியாக உழைத்து புதிய வழிகளை தேடியவர் இஸ்மானே. வறுமையைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க, ஊட்டச்சத்துக்களை கூட்ட முயன்றார். இவரின் வழிகாட்டுதலில் அந்த அமைப்பு மூலம் வளமிழந்த மண்ணை மீட்பது, ஆரோக்கியமான முறையில் பயிர்களை வளர்ப்பது ஆகிய பணிகள் சிறப்பு அடைந்தன. இஸ்மானே, முன்னர் ஐ.நாவின் உணவு பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு புதிய பணிவாய்ப்பில் இருந்த சவால்கள் தெரியும், எனவே, அவற்றைத் தீர்க்கும் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்தார். உலகம் முழுக்க உணவு விநியோகம் என்பது நம்பகத்தன்மையோடும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் அமைந்துள்ளது. இதன் விளைவாக, எதிர்காலத்தில் எந்த குழந்தையும் பட்டினியோடு இருக்காது எனும் நம்பிக்கை உருவாகிறது.
-பில்கேட்ஸ்
ismahne elouafi
-----------------------------------------------
richard thompson
ரிச்சர்ட் தாம்சன்
கடல் உயிரியலாளரான ரிச்சர்ட், 1993ஆம் ஆண்டு கடல் அலைகளில் சிறிய பிளாஸ்டிக்குகளை கண்டறிந்தார். அதாவது ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில் மைக்ரோபிளாஸ்டிக். அந்த சொல்லை புழக்கத்திற்கு கொண்டு வந்ததே ரிச்சர்ட் தாம்சன்தான். இன்றைக்கு நாம் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் நமக்கு என்னென்ன ஆரோக்கிய குறைவை ஏற்படுத்துகிறது என சிந்தனை செய்துகொண்டிருக்கிறோம். பாதிப்பை சரி செய்ய முயல்கிறோம். இப்படியான சூழல் அச்சுறுத்தல் உள்ளது என உலகிற்கு கூறியவர், அன்னார்தான். இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் கடல் கழகத்தை உருவாக்கி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். கொள்கை வகுப்பாளர்கள், அரசு, குடிமகன்கள் என அனைவரும் மைக்ரோபிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த உழைக்கவேண்டும். மாசுபாட்டைக் குறைக்க பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைக்கவேண்டும் என கூறினார். ரிச்சர்ட் கூறியதோடு ஏற்கெனவே சேர்ந்துவிட்ட குப்பைகளை அகற்றும் பணியை தளர்வுறாது செய்யவேண்டும்.
-மெக்கிப்பன்
நன்றி - டைம் இதழ்



கருத்துகள்
கருத்துரையிடுக