பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்



 
பிழைத்திருப்போம்
பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி?
வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம்.

பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும். இந்திய பேரரசர்தான் இந்தியாவுக்கான மிகப்பெரிய பேரிடர் என்று தெரிந்துதான் வடநாட்டினரே சட்டவிரோதமாக வேறு நாட்டுக்கு தப்பி ஓடினர் என்பது ஊரறிந்த செய்தி.

ஆபத்து காலத்தில் ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம். இதற்கான உரிமம் பற்றி முன்னமே விசாரித்துக்கொள்ளுங்கள். இந்த ரேடியோ ஆபத்துக்காலத்தில் உதவியாக இருக்கும். மேற்கு நாடுகளில் ஹாம் ரேடியோ கொண்டிருப்பவர்கள் கிளப்புகளாக இயங்குகிறார்கள். பேரிடர் காலங்களிலும் மதவாதிகளின் அமைப்புகள் போல கிடைத்ததை சுருட்டாமல் மனிதநேயத்தோடு உதவி புரிய முயல்கிறார்கள்.
ஸெல்லோ என்ற ஆப் மூலம் போனை வாக்கி டாக்கி போல பயன்படுத்தலாம். இதற்கு இணைய இணைப்பு வேண்டும். சமூக வலைத்தளமோ, ஹாம் ரேடியோவோ எங்கு எந்த செய்தி கேட்டாலும் உடனே நம்பிவிடவேண்டாம். கவனமாக யோசித்து செயல்படுங்கள்.

அடுத்து உங்களிடம் உள்ள வளங்களைப் பார்ப்போம். பேரிடரில், கலவரத்தில் வீடு தப்பியதா, சேதமடைந்துவிட்டதாக என்று பார்க்கவேண்டும். எங்காவது பாதுகாப்பாக வசிக்க வேண்டும். அதுதான் முதல் வேலை. அடுத்து உணவு, குடிநீர் ஆகியவற்றை போதுமான அளவு இருக்கிறதா என பார்க்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஏதாவது மருந்துகள் வேண்டுமா, வீட்டில் இருக்கிறதா வாங்க வேண்டுமா என பார்க்கவேண்டும். நிலநடுக்கம், காட்டுத்தீ, வெள்ளம், புயல், மதக்கலவரம் என ஏதாக இருந்தாலும் சரி. சூழலை உத்தேசித்து பால், தயிர், அரிசி, பருப்பு, மருந்துகளை முன்னமே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

வீட்டில் இருக்க முடியாது என வெளியேறி போகும் சூழல் இருந்தால், இருக்கும் மளிகைப் பொருட்களை சமைத்து பக்கத்து வீட்டினரை அழைத்து விருந்து போல போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுங்கள். ஏனெனில் பொருட்களை வீணாக்குவதை விட நான்கு பேருக்கு சோறு போட்டு பயன்படுத்தலாம். அவர்கள் அடுத்தநாள் மலம் கழிக்கும் வரையாவது நன்றி உணர்வைக் கொண்டிருப்பார்கள். சிலர் குடலையே உருவிக்கொடுத்தாலும் அது நேற்றைக்கு இன்றைக்கு ஏதுமில்லையே என்பார்கள். அவர்களை மறந்துவிடுங்கள்.

குளிர்பதனப்பெட்டி மின்சாரம் இல்லாத சூழலில் நான்கு மணிநேரம் மட்டுமே குளிர்ச்சியைக் கொண்டிருக்கும். அதில் பதப்படுத்தவேண்டிய உணவுப்பொருட்களை போட்டு வைக்கலாம். அனைத்து பொருட்களையும் அல்ல. பாட்டிலில் உள்ள ஏதாவது உணவுப்பொருட்களை வைக்கலாம். யோகர்ட், பால் போன்றவை. இவை எல்லாமே தனியாகவே உணவுப்பொருள்.

இந்திய பேரரசர் போல ஊரே நோயால் சாகும்போது மக்களை அதில் இருந்து திசைதிருப்ப ஆக்டிவிட்டி வகுப்புகளை எடுத்தார். அதுபோல அவமானகரமான செயல்களை எப்போதும் செய்யாதீர்கள். முடிந்தால் பிறருக்கு, வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள். இல்லையா உங்களை, உங்கள் ரத்தபந்தங்களை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு நடந்த அத்தனை விஷயங்களையும் வீடியோவாக ஆடியோவாக பதிவு செய்ய வசதி வாய்ப்பு உள்ளது. ஒரே ஒரு சீன நிறுவன போன் போதும். வீடு பேரிடரில் இடிந்துவிட்டதா, அதற்கென காப்பீடு வேண்டுமென்றால். அதை புகைப்படம் எடுத்து தேவையான தகவல்களோடு மின்னஞ்சல் அல்லது மேக கணியத்தில் சேமித்து வையுங்கள். போன் காணாமல் போகலாம். சொந்தக்காரர்கள் திருடிக்கொள்ளலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். முறையாக இழந்த சொத்துக்கள், சேதமான பொருட்களைப் பற்றி ஆவணப்படுத்தி வைத்தால் பிற்பாடு இழப்பீடு பெற உதவியாக இருக்கும்.

வீடு, நிலம், தொழிற்சாலை என பேரிடரில் எதுவேண்டுமானாலும் அழிவை சேதத்தை சந்திக்கலாம். பரவாயில்லை என எடுத்துக்கொண்டு அதை தூய்மைப்படுத்த முயலவேண்டும். அப்போதுதான் வேலை முடியும். அரசை, தன்னார்வ நிறுவனங்களை எதிர்பார்த்துக்கொண்டு உட்காராதீர்கள். உங்கள் பணியை நீங்கள்தான் தோளில் பொறுப்பேற்று செய்யவேண்டும்.  



2

நீங்கள் தயாரா?

குல்லாவும் தாடியும் வைத்தவர்கள்தான் உங்களை தாக்குவார்கள் என நினைக்கிறீர்களா என்ன? மடம் வைத்து மதம் வளர்ப்பவர்கள் கூட உங்கள் வாழ்க்கையை பறித்துக்கொள்ள முடியும். சொத்துக்களை சூறையாட முடியும். அதற்கென கால்நக்கி பிழைக்கும் ஊடகங்கள் துணையுள்ளன. தேசப்பற்று, நாடு, மொழி, சாதி, மதம் என எந்த பெயரில் வேண்டுமானாலும் அழிவு வரலாம். அனைத்திற்கும் வேர்பிடித்து நின்று தயாராக இருக்கவேண்டும். அதற்கான தயார்படுத்தல்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலில் அரசை நம்ப வேண்டாம். வானத்தில் இருந்து குதித்து யாரும் உங்கள் உயிரைக் காக்க மாட்டார்கள். மதவாத நாடான இந்தியாவில் அரசே தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. அரசு அமைப்பு ரீதியாக ஒடுக்குமுறைகளை செய்கிறது. எனவே, நேரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். நம் கையே நமக்குதவி என கைத்தொழில் மன்னராக நீங்களே மாற வேண்டும். சுலோகம் சொல்லி கொண்டிருந்தால் நம் வாழ்க்கை நம் கையில் இருக்காது.

உங்கள் மீது திறமை மீது நம்பிக்கை இல்லையென்றால், உடனே வாழும் இடத்தைவிட்டு கிளம்பிவிடுங்கள். என்ன செய்தாயினும் உயிரோடு இருப்பது முக்கியம். காட்டுத்தீ, நிலநடுக்கம் ஆகியவற்றின் போது அரசே மக்கள் மீது இரக்கம் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுவார்கள். அந்த இடத்தை பிற்பாடு ஏ1ஏ2 என யாருக்காவது விற்கட்டும். ஆனால் நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

புயல், மழை, இடி, மின்னல் என சூழல் இருந்தால் ஏதேனும் ஓரிடத்தில் நீங்கள் தங்கியே ஆகவேண்டும். உடனே பயணிக்க முடியாது. வீடு ஏன் பாதுகாப்பானது. அங்கு உணவு, குடிநீர் இருக்கும். மற்ற இடங்களில் அது இருக்காது. எனவே, அடிப்படை விஷயங்களை தயார் செய்துகொண்டு ஓடுங்கள்.

நாயகத்தனம் செய்யாமல் உங்களையும் குடும்பத்தையும் காக்கும் முயற்சியை செய்யுங்கள். திரைப்படம் வேறு நிஜ வாழ்க்கை வேறு. உங்கள் ஏரியாவில் வெள்ளம் அடிக்கடி வருமா, அதற்கேற்றபடி வீட்டை மணல் மூட்டை அடுக்கி பாதுகாக்கலாம். பனிவிழுமா அதற்கேற்றபடி கூரைகளை உலோகத்தில் அமைத்து பலப்படுத்தலாம். உங்களுக்கு வீட்டு வேலை தெரிந்தால் தச்சுவேலை, மின்சார வயரிங்கை செய்யலாம். தெரியவில்லையா அதற்கென ஆட்கள் இருப்பார்கள். அவர்களை அழைத்து செய்யுங்கள்.

வீட்டில் எப்போதும் ஜெனரேட்டர், கூடுதலாக எரிபொருள் இருப்பது நல்லது. அப்போதுதான் உணவு தயாரிப்புக்கு எளிதாக இருக்கும். எரிவாயு உருளை, மின் அடுப்பு பயன்றறு போனாலும் சாதாரண தீக்குச்சியை கிழித்து விறகு வைத்து அடுப்பை பற்ற வைக்க முடியும். எந்த விஷயத்திலும் பேக்கப் பிளான் தேவை. ஒன்றை மட்டுமே நம்பி இருந்தால் நாதியற்று போய்விடுவோம். ஜாக்கிரதை.

வீட்டு வேலைகளை நீங்களே செய்ய ரம்பம், அரிவாள், திருப்புளி, சுத்தி ஆகியவை பல்வேறு அளவுகளில் தேவை. ஆபத்துக்காலத்தில் உதவும். பேரிடர் காலங்களில் ஓட்டல் உணவுகள் போல சாப்பிட முடியாவிட்டாலும் ரொட்டித்துண்டு கூட கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்போம். எனவே, முடிந்தவரை உணவுகளை சேமிக்கவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி வைக்கவேண்டும்.

தகவல்தொடர்புக்கு வானொலி, செல்போன் என இரண்டுமே தேவை. ஆபத்தில் உதவும். பேரிடர் காலங்களில் மனநிலை தடுமாற வாய்ப்புள்ளது. அதை சரிசெய்ய சில விளையாட்டுகளை விளையாடலாம்.

நீரை சுத்திகரித்து அருந்துவது முக்கியம். அதற்கென சில ஃபில்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை முன்னே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அடுத்து, முதலுதவி பெட்டி அவசியம் தேவை. நெருப்பு மூட்டுவதற்கான பூட்டேன் லைட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

மூலம்
பிரெப்பர் இதழ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!