இடுகைகள்

குங்குமம் - நம்பிக்கை மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவரெஸ்டில் சாதனை சமையல்!

படம்
எவரெஸ்டில் சாதனை சமையல் !- ச . அன்பரசு தங்கம் , வெள்ளி என எதுகொடுத்தாலும் போதாது போதாது என்பவர்கள் இதற்கு மேல் முடியாது என சொல்லி சரண்டர் ஆவது உணவில் மட்டும்தான் . அப்படி பல்லாயிரக்கணக்கான வயிறுகளை திருப்தியுடன் குளிர்வித்து தன் சமையல் சாதனைகளையும் நீட்டித்துக்கொண்டே செல்கிறார் லண்டனின் புகழ்பெற்ற சமையல்கலைஞரான வினீத் பாட்டியா . லண்டனின் செல்வாக்கான மனிதர்களின் லிஸ்டில் தவிர்க்க முடியாத சமையல் ஆளுமை . 30 ஆண்டு கிச்சன் அனுபவத்தில் பிரபலங்களின் நாக்குகளை தன் கைமணத்திற்கு அடிமையாக்கியவர் . மிட்செலின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒன்பது ஹோட்டல்களை நடத்தும் சமையல்கலைஞர் வினீத் பாட்டியா செய்யும் சமையல் எக்ஸ்பரிமெண்டுகளுக்கு வானமே எல்லை . தற்போது இவர் தொட்டுள்ளது எவரெஸ்ட் சிகரத்தை . எவரெஸ்டில் சமையல் செய்வதுதான் வினீத்தின் அடுத்த சவாலே சமாளி டாஸ்க் . மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த வினீத்திற்கு விமானப்படையில் சேர்வதுதான் கனவு . எழுத்து தேர்வில் ஜெயித்தவருக்கு உடற்தகுதி மைனஸாக , விரக்தி அடைந்தவரின் வாழ்க்கையை அவர் பிடித்த சமையல்கரண்டி கரையேற்

குப்பை பொறுக்கினால் வடகிழக்கு மாநிலம் ஒளிரும்! - தி பட்டி புரொஜெக்ட்

படம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒளிதரும் பெங்களூரு இளைஞர்கள் ! - ச . அன்பரசு சாதாரணமாக வீட்டில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை காலாவதியான எலக்ட்ரிக் பொருட்களை என்ன செய்வோம் ? பிளாஸ்டிக் பொருட்களை எடைக்கு போடுவோம் . ஸ்வட்ச் பாரத் , சுகாதாரம் ஆகிய வார்த்தைகளை ஜபித்தபடி குப்பையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு இந்திய குடிமகனாக கடமையை ஈடேற்றுவோம் . ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ராஜிவ் ரத்தோட்டுக்கு குப்பை மிக முக்கியமான பொருள் . காலையில் எழுந்ததும் அவரின் முதலும் முக்கியமுமான வேலை , குப்பை பொறுக்குவதுதான் . புத்தியெல்லாம் பிசகவில்லை . நன்கு படித்த இளைஞர்தான் . ராஜிவ் குப்பை பொறுக்க காரணம் , வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஏழை பழங்குடிகள்தான் . கார் மூலம் பெங்களூருவின் தெருக்களை சல்லடையாக சலித்து குப்பையில் எலக்ட்ரிக் பொருட்களை பொறுக்கி மூட்டை கட்டி வீட்டுக்கு எடுத்துவரும் ராஜிவ் அதனை வடகிழக்கு மாநில மக்கள் மின்சாரம் பெற பயன்படுத்துகிறார் . The Batti Project என்ற பெயரில் திட்டத்தை தன் நண்பர் மெர்வின் கவுன்டினோவுடன் இணைந்து தொடங்கி 4 டன் இ - கழிவுக