சிந்தனையாளர் மாக்கியவெல்லி படைப்புகள்!
சிந்தனையாளர் மாக்கியவெல்லி நாரா நாச்சியப்பன் இந்த நூலில், மாக்கியவெல்லி எழுதிய அரச நீதிகள், அவரின் நூல் ஆராய்ச்சி, நாடகம் கடிதங்கள், மணிமொழிகள் ஆகியன ஒன்று இடம்பெற்றுள்ளது. ஓரளவுக்கு இந்த நூல் மாக்கியவெல்லியின் பல்வேறு வித எழுத்துகளை ஒன்றாக தொகுத்து நமக்கு அளிக்கிறது. ஏற்கெனவே நாம் பிரின்ஸ் என்ற நூலை ராஜதந்திரம் என்ற மொழிபெயர்ப்பு நூல் வழியாக வாசித்துவிட்டோம். எனவே, அவற்றை தவிர்த்துவிட்டாலும் கூட வாசிக்க சுவாரசியமான பகுதிகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடிதங்கள். அதில், அவர் தனக்கு பதவியில் நேரும் நெருக்கடிகளை, வறுமை நிலையை வெளிப்படையாக எழுதியுள்ளார். பொதுவாக கவிஞராக அறியப்பட விரும்பியவர். ஆனால், அவரை உலகம் சிந்தனையாளராகவே பார்த்தது. அரசியல் நூல்களையே முக்கியமானதாக பார்த்தது சற்று வினோதமானதுதான். தமிழ் மொழிபெயர்ப்பு நூல் முழுக்க இடர்ப்பாடு இல்லாமல் உள்ளது. ராஜதந்திரம் நூலை விட இந்த நூல் இன்னுமே தெளிவாக தனது அரச நீதிகளை முன்வைக்கிறது என கூறலாம். மாக்கியவெல்லியின் படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக, அவரது சிந்தனை, வாழ்க்கை நிலை, முடியாட்சியின் அவரது நிலை, குடும்ப...