இடுகைகள்

இயேசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகராக சிறந்த பழக்கங்களை கற்றுக்கொள்ள சொல்லித்தரும் அற்புதமான குறுங்கதை நூல் - உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

படம்
  உங்களுக்குள்ள விலையில்லாத ஆற்றல்  மாக் ஆண்டினோ நாகலட்சுமி சண்முகம்  மிஸ்டிக் ரைட்  இந்த நூல் ஒரு சுய முன்னேற்ற நூல். ஆனால் நாவல் போன்ற மொழி வடிவம் கொண்டது. இதனால் நூலை படிக்கும்போது கட்டுரைகளைப் படிக்கிறோம். அதில் நிறைய மாறுங்கள், மாற்றுங்கள் என்பது போன்ற அறிவுறுத்தல்களை பார்க்கும் சங்கடம் நேராது.  நூலில், தனது இறுதிக்காலத்தை எட்டும் வயதான வணிகர் இருக்கிறார். அவர், உலகிலேயே பெரிய பணக்கார வணிகர் என்ற பெருமையை எட்டிவிட்ட நிலை. அந்த நிலையில் அவர் தான் இதுவரை சேர்த்த பணத்தை தன்னோடு வியாபாரம் செய்தவர்கள், ஏழைகள் என பலருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இது அவரின் நண்பராக தொழிலை கவனித்து வரும் மேலாளருக்கு கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சியும் திகைப்புமாக ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று சொல்லும்போது, தான் இறக்கப்போகிற காலகட்டம் வந்துவிட்டது. இந்த தொழிலை தொடங்கும்போது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி தான் பணத்தை மக்களுக்கு பகிர்ந்துகொண்டேன். நான் இறந்தபிறகு இதுவரை வசித்த இந்த மாளிகையை எனது உண்மையான நண்பரும், மேலாளருமான உனக்கு வழங்குகிறேன் என பணக்கார வணிகர் சொல்லுகிறார்.  ஏன் தனது ச

கிறித்துவத்தில் ஒளிந்திருக்கும் தொன்மை மர்மம்! - டாவின்சி கோட்

படம்
டாவின்சி  கோட் டான் ப்ரௌன் எதிர் வெளியீடு பிரான்சிலுள்ள  அருங்காட்சியகத் தலைவர், மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவர் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவரின் மூன்று நண்பர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுவிடுகின்றனர். இந்த கொலை கற்சாவி ஒன்றுக்காக நடைபெறுகிறது. இந்த கொலைகளை டீச்சர் என்பவர் வழிநடத்த அரிங்கரோசா என்ற பிஷப்பின் சீடன் சிலாஸ் எனும் அடிப்படைவாதி கொலைகளை செய்கிறான். ஏன் இந்த கொலைகள், கற்சாவி என்பது என்ன?  என்பதை விவரிக்கிறது டாவின் கோட். நாவல் முழுக்க ஏராளமான கணிதப்புதிர்கள் உள்ளன. கணிதத்தில் 35 மார்க்குகளை எடுத்த ஆட்கள் இந்த நூலை தவிர்ப்பது நல்லது. காரணம், ஏராளமான விஷயங்கள் கணிதம் மூலமாகவே பூடகமாகவே கூறப்படுகின்றன. பிபனாச்சி தொடர்வரிசை, டாவின்சியின் குறியீட்டு முறை, என்கிரிப்ஷன், டீகிரிப்ஷன் என பல்வேறு புதிர்முறைகளை சிறப்பாக அமைத்து அதனை விடுவித்திருக்கிறார் நூல் ஆசிரியர் டான் ப்ரௌன். நூலில் புதிராக அமையும் கதாபாத்திரம் அதனை சிறப்பாக வடிவமைத்து இறுதியில் அதனை உடைத்து பிரமிப்பு தருகிறார் ஆசிரியர். முழு நாவலையும் வடிவமைப்பது டீச்சர் எனும் போனில் மட்டும் பாத்திரம்தான்

நெருப்புச்சொற்களில் அனல் கவிதைகள்- தடை செய்யப்பட்ட புத்தகம்

படம்
தடை செய்யப்பட்ட புத்தகம் வசுமித்ர சிந்தன் புக்ஸ் ரூ.140 சமூகத்தை பிளவுபடுத்தும் அத்தனை சக்திகளுக்கும் தன் சொற்களாலேயே தண்டனையை அறிவித்துவிட்டார் வசுமித்ர. அதற்கான முன்கூட்டிய அறிவிப்பு, தடை செய்யப்பட்ட புத்தகம். மனிதர்களை அடிமையாக்கி சுரண்டியவர்கள், சுரண்டுபவர்கள், சர்வாதிகாரிகள் ஏன் உங்கள் மேலதிகாரி என  யார் படித்தாலும் நூலிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் முட்களாக குத்தும். கவிதைக்கான அத்தனை சொற்களிலும் அவ்வளவு கோபம். எரிமலையின் லாவாவாக நம் மனதை கொந்தளிக்கச் செய்கிறது. அதுவும் கிறிஸ்துவர்கள் படித்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவு தூரம் வரலாற்றை குடைந்து கவிதை செதுக்கியுள்ளார் வசுமித்ர. உலக அரசியல், ராஜபக்ச, ட்ரம்ப், கிறிஸ்தவம், ஏசு, பைபிள், ராமன் என அனைத்தும்  தமிழ் மொழியை நாயாக ஏவி கடிக்க வைத்திருக்கிறார் கவிஞர். படிக்கும் அனைவருக்கும் அவரின் இனப்படுகொலை குறித்த கவிதைகள் கனவிலும் துரத்தும் என்பது உறுதி. அமெரிக்காவுக்கு என்று வரும் கவிதைகளில் லாவாவின் வீச்சு அதிகம். அதிலும் என்ன செய்துகொண்டிருந்தாய் ஜூசஸ்? என்பதை எப்படி கிறிஸ்தவர்கள் படிக்கப் போகிறார்