இடுகைகள்

தி சாய்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் அறுவை சிகிச்சைக்காக மோசடியில் இறங்கும் பொருளாதார பேராசிரியர்! - தி சாய்ஸ் - துருக்கி தொடர்

படம்
              தி சாய்ஸ் துருக்கி பத்து எபிசோடுகள் writers..... Nuket Bicakci Özlem Yücel Damla Serim மூளையில் கட்டி ஏற்பட்டதால் அடிக்கடி கண்பார்வை மங்கி , கைகளில் பலமின்றி மயங்கி விழும் மகனைக் காப்பாற்ற பொருளாதார பேராசிரியர் செய்யும் மோசடி வேலைகள்தான் கதை ..   இர்பான் சாயூன் என்ற பொருளாதாரப் பேராசிரியர்தான் கதை நாயகன் . பொருளாதாரமும் , பணமும் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் அறிந்த பேராசிரியர் . ஆனால் பல்கலைக்கழகம் ஒன்றில் தற்காலிக வேலை பார்த்து வருகிறார் . பல்கலைக்கழக அரசியலால் வேலை இழக்கிறார் . அதேசமயம் அவரது மகன் டென்னிஸிற்கு மூளையில் கட்டி எனும் தகவலையும் அறிந்துகொள்ள மனமுடைந்து போகிறார் . அவனைக் காப்பாற்ற நாற்பது ஆண்டுகளாக நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையையும் தூக்கிப்போட்டுவிட்டு மோசடிக்காரனாக மாறுவதுதான் மையக் கதை . இதைச்சுற்றி அவனை காதலித்துவிட்டு பின்னர் தூக்கியெறிந்த இலாய் , எப்போதும் மோசடிகளில் ஈடுபடும் இர்பானின் நண்பர் எக்மன் , தன்