இடுகைகள்

பயன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான்.  அறி

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில்

பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்

படம்
  அகம்புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. அன்பு அதன் தன்மையில் எத்தகையது? ப. அன்பு என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப் போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால் அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம். அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர் என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது. அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.   இப்போது பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான் உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கிறேன். ஆனா

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன்.  யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியு

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது . இதில் பிரேசில்