செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

 









சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது. 


தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும். 


சாம் ஆல்ட்மனிடம் பேசினோம். 


சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்?


எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான். 


அறிமுக வரவேற்பு உங்களை ஆச்சரியப்படுத்தியதா?


எங்களின் வெளியீடு மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என நம்பினோம். ஆனால், மக்களின் ஏகோபித்த வரவேற்பை உறுதியாக எதிர்பார்க்கவில்லை. அது இணையத்தின் தொழில்நுட்பம் சார்ந்தது. கூடவே இந்த தொழில்நுட்பம் ஏன் முன்பாகவே வரவில்லை என்று கூட விவாதங்கள் எழுந்தன. 


சாட்ஜிபிடி தவிர்த்து பிற ஏஐக்களும் கூட சந்தையில் உள்ளன...


இங்கு முக்கியம், மக்களின் கருத்துதான். அவர்களின் அனுபவம்தான் கவனிக்கவேண்டியது. அதன் வடிவம் பார்த்தீர்களானால் எழுத்து வழி உரையாடலுக்கானது. நான் எழுத்து வழியான உரையாடலின் ரசிகன். அதை அதிகளவு பயன்படுத்தி வந்தேன். அந்த ஊக்கத்தின்படிதான் சாட்ஜிபிடியின் வடிவம் உருவாக்கப்பட்டது. 


நேருக்கு நேராக இருவர் சந்தித்து உரையாடுவது முக்கியமானது. அந்தவகையில் நாங்கள் உருவாக்கியுள்ள மாடலானது, குறைந்த பேச்சு வழியாக அதிக தகவல்களை பெறும்விதமாக உள்ளது. உங்கள் ஏஐ எந்தளவு நன்றாக தெரிந்துகொள்கிறதோ அந்தளவுக்கு அதன் பதில் தெளிவாக துல்லியமாக இருக்கும். 



செயற்கை நுண்ணறிவு சேவைகள் போனில் உட்பட அனைத்து இடங்களிலும் கிடைக்குமா?


சிறிது நாட்களிலேயே நாம் பயன்படுத்துகிற அனைத்து வசதிகளும் செயற்கை நுண்ணறிவு பின்னணி கொண்டவையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இப்படி மாறும் சேவைகள் போனில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் மக்களுக்கு கிடைக்கும். 



செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு ஆபத்து, ஆனால் மனித குலத்திற்கு கெட்டது என்று கூறுகிறீர்களே எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்.


மனித குலத்திற்கு நீண்ட கால அடிப்படையில் நல்லது. இன்று அறிவியல் திரைப்படங்களை பார்க்கிறீர்கள் அல்லவா? அதில் பல்வேறு மாற்றங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். அந்தளவு மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு உண்டாக்கும். ஆனால் மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையில் இதன் பின்விளைவுகள் தீவிரமாக இருக்கும். மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்துமே மாறும். அவர்கள் இணையத்தில் தொடர்புகொள்ளும் முறை மாறுபடத் தொடங்கும். 


பெற்றோராக குழந்தைகளை நினைத்து கவலைப்படவேண்டியிருக்கிறதே?


எனக்கு உதவி தேவை, பணம் தேவை என குழந்தைகள் போனில் பேசுவதை நம்ப முடியாது. ஆனால் இப்படியான ஆபத்துகள் எதிர்வரும் காலத்தில் வரும் என எச்சரிக்கையாக இருக்கலாம். இது உண்மையிலேயே பெரும் பிரச்னையாக மாறலாம். இப்போது கூட இப்படியான போலியான குரல் அழைப்புகளுக்கு பலியாகும் பெற்றோர் உள்ளனர். 


இனி நம் குழந்தைகளோடு குறிப்பிட்ட கோட்வேர்டில் பேச வேண்டுமா?


பாதுகாப்பு கருதி அப்படியும் செய்யலாம். இந்த முறை கூட குறிப்பிட்ட காலத்திற்கு உதவும். கிரிப்டோகிராபிக் வசதிகளை ஒருவர் பயன்படுத்தலாம். நம்மால் இதுபோன்ற சூழல்களுக்கு ஏற்ப நம்மை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். அப்படித்தான் நாம் சமூகமாக வளர்ந்து வந்திருக்கிறோம். 


டைம் வார இதழ் 

பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்