இடுகைகள்

ஹியூன் பின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியைக் காப்பாற்ற தனது ஆன்மாவையே தியாகம் செய்யும் காதலன்! சீக்ரெட் கார்டன்

படம்
                        காதலர்களின் ஆன்மா இடம்மாறினால்…… . கிளாட்ஸ்ரோபோகிக் உள்ள தொழிலதிபருக்கு சினிமாவில் சண்டைபோடும் ஸ்டண்ட்கலைஞர்க்கு வரும் காதல்தான் மையக்கதை . கிம் ஜூ போன் , வம்சாவளியாக நிறுவனத்தை நிர்வகிக்க வந்தவர் . இவரது நிர்வாகத்தில் வணிக மால் ஒன்று உள்ளது . இவரது அலுவலகத்தில் இவருக்கு உள்ள உளவியல் பிரச்னையைக் கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்து அதை வைத்து நிறுவன இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்க சதி நடக்கிறது . இதனை நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்துவரும் அவருடைய மாமாவே செய்கிறார் . கிம்மைப் பொறுத்தவரை தினசரி வேலைக்கு போவதில் ஆர்வம் கிடையாது . வாரத்திற்கு மூன்று முறை அலுவலகம் வருபவர் மீது நேரம் எல்லாம் , ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார் . அதுபோக நேரம் கிடைத்தால் இவரது குடும்பம் ஏற்பாடு செய்யும் பெண்களுடன் டேட்டிங் எனும் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது . இப்படி வரும் பெண்களை முரட்டுத்தனமாக கேள்வி கேட்டு அவர்களை பீதியாக்கி ஓடவிடுவது கிம்முக்கு முக்கியமான ஹாபி .    கிம்முக்கு தன்னை ஆச்சரியப்படுத்தும் பெண்களே கிடைக்கவில்லை என்ற

அரசரைக் கொல்ல தற்கொலைப்படை திட்டம் - தி ஃபேட்டல் என்கவுண்டர்!

படம்
தி ஃபேட்டல் என்கவுன்டர் - தென்கொரியா 2014 இயக்கம் - லீ ஜே க்யூ ஒளிப்பதிவு - கோ நாக் சியோன் இசை மோவிக் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவை படுகொலை செய்ய நோரன் எனும் கொலைகாரப்படை திட்டமிடுகிறது. இதற்காக, அவர்கள் செய்யும் முயற்சியும், உள்ளுக்குள் அரசருக்கு நெருக்கமான உறவுகளின் அதிகாரப்போட்டியும்தான் படம். படத்தின் காட்சிகள் முன்பின்னாக நகர்கின்றன. ஒரு காட்சி முடிந்தபின், அதற்கு 45 நிமிடங்கள் முன்னதாக என மாறி மாறி நகர்வது ஒரு கட்டத்தில் இயக்குநர் நம்மை பரிசோதனை எலியாக மாற்றுகிறாரோ என்று தோன்றுகிறது. தொடக்க காட்சியில் அரசு படைவீரர்கள் விழுந்து கிடக்க, அறை உள்ளேயிருந்து தீனமான அலறல் கேட்க காட்சி மாறுகிறது. உண்மையில் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவின் வாழ்க்கையை தழுவியது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டுவரை இவரது ஜோசியன் வம்சம் தென்கொரியாவை ஆண்டது. துரதிர்ஷ்டமான மன்னர் என்று வரலாற்றில் இவர் அழைக்கப்படுகிறார். காரணம், இவர் மன்னரான சமயம் இவரது குடும்பத்தில் நேர்ந்த அநீதியான மரணங்கள்தான். அதற்கு இவர்களின் ரத்த வழி உறவுகளை காரணமாக இருக்கின்றன. தற்கொலைப