இடுகைகள்

டோக்கியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று நாட்கள் வீக் எண்ட் - ஜப்பான் மைக்ரோசாப்ட் சோதனை!

படம்
giphy.com பத்திரிகைகளுக்கு எப்போதுமே லீவு கிடையாது. லீவு விட்டால் செய்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். ஆனால் புரடக்டிவிட்டி என்று பார்த்து, ஐடியாக்களை தேடினால் மணிக்கணக்கில் நீளும் மீட்டிங்கில் எல்லாரும் தேவாங்கு போல உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தடுத்த ஐடியா என கேட்கும்போது, முதலில் பேசியவர் போனில் சமூகவலைதளத்தில் உறைந்துவிடுவார். இப்படியே ஆபீஸ் மீட்டிங் அத்தனை கஷ்டங்களையும் சொல்லிவிடும். இதற்கு ஒரே பதில்தான். லீவு வேண்டும். மைக்ரோசாப்ட் - ஜப்பான் இதற்காகவே 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை சொல்லி, பிற பஞ்சாயத்துகளை ஆப் மூலம் செய்தி பரிமாறி செய்தனர். என்ன ஆச்சரியம் ஊழியர்களின் பணித்திறன் முன்பை விட 40 சதவீதம் மேம்பட்டிருந்தது. காரணம் மூன்று நாட்கள் வீக் எண்டாக கம்பெனி கொடுத்ததுதான். வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் என்பதுதான் மைக்ரோசாஃப்ட் இதற்கு சூட்டிய பெயர். தனிநபர்களாக செய்த விற்பனை அளவில் இதனை கண்டறிந்துள்ளனர். 92 சதவீத பணியாளர்கள் நான்குநாட்கள்தான் வேலை என்பதற்கு மகிழ்ந்தனர். பிரிண்ட் எடுக்கும் செலவு 59 சதவீதம் குறைந்தது. மின் செலவு 23 சதவீதம்

நூடுல்ஸின் கதை! - உலகம் முழுக்க சாப்பிடப்படும் மலிவு விலை உணவு

படம்
தெரிஞ்சுக்கோ! நூடுல்ஸ் கதை! ஜப்பானில் போருக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு இன்ஸ்டன் நூடுல்ஸ் அறிமுகமானது. முதலில் அதனை காஸ்ட்லி ஐட்டமாகவே மக்கள் பார்த்தனர். இன்று மிக மலிவான உணவாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அளவுக்கு நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் ராமன் நூடுல்ஸ், பெருமளவு விற்கப்படுகிறது. பிளாட்பார்ம் உணவு என கிண்டலாக கூறப்படுகிறது. ஆனால், இருபதே நிமிடத்தில் தயாரித்து பசியாற்றும்  உணவாக உலகெங்கும் சாதனை படைத்துள்ள உணவு இது. சாதாரண ராமன் நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள சோடியத்தின் அளவு 1820 மில்லி கிராம். அமெரிக்காவின் எஃப்டிஏ பரிந்துரைத்துள்ள சோடியத்தின் அளவு 2300 மில்லி கிராம். அமெரிக்காவின் நூடுல்ஸ் மார்க்கெட் மதிப்பு 1.7 பில்லியன் ஆகும். தொண்ணூறுகளில் பரிமாறப்பட்ட இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் அளவு - 100 பில்லியன். நூடுல்ஸ் மியூசியத்திலுள்ள நூடுல்ஸ் வேறுபட்ட வகைகள் - 5,460 தோராயமான நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றின் விலை 30 சென்ட். டோக்கியோவிலுள்ள நூடுல்ஸ் உணவகங்களின் எண்ணிக்கை 5 ஆயிரம். ஒரு பாக்கெட்டிலுள்ள நூடுல்ஸின் தோராய நீளம் 51 மீட்டர். ஜார்ஜியாவ

சூப்பரான பயணங்களுக்கு ஏற்ற நகரம் எது?

படம்
pinterst பொதுவாக ஒரு நாட்டிற்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு அழகான இடங்கள் இருப்பதோடு, அந்நாட்டின் கலாசாரமும் ஈர்ப்பாக இருக்கும். அது ஒரு முக்கியமான காரணம்தானே? அண்மையில் எடுக்கப்பட்ட வணிகம் மற்றும் ஜாலி டிராவல் திட்டத்தில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் டில்லி, மும்பையும் அதன் கலாசார விஷயங்களால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முன்னிலை பெற்றிருந்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் கீழே சரிந்துள்ளன. அதேநேரம் பாதுகாப்பான நாடு என்றால் சிங்கப்பூரை சந்தேகமின்றி கைகாட்டலாம். போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வணிக விஷயங்களிலும் சிங்கப்பூரே டாப் ஸ்பாட். நன்றி: டைம்ஸ்