இடுகைகள்

எஞ்சின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலியே இல்லாத உலகை உருவாக்க முயல்பவனின் வாழ்க்கையில் வரும் இசை! குவ்வா கோரிங்கா -

படம்
  குவ்வா கோரிங்கா தமிழில்  காதல் பறவைகள் சத்தமே பிடிக்காமல் அலர்ஜியாக இருப்பவன், தாயின் இசை ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வயலின் இசைக்கும் பெண் என இருவரும் அருகருகே அறை அமைந்தால் எப்படியிருக்கும்.  அதுதான் படத்தின் கதை.  படத்தில் லாஜிக் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பார்க்காமல் இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக சத்யதேவ், பிரியா லால் ஆகியோரின் இரு அறைகளும் ஒருவர் பேசுவதை எளிதாக பிறர் கேட்பது போல இருப்பது.  இதுதான் படத்தின் முக்கியமான அம்சம்.  சத்யதேவைப் பொறுத்தவரை அவருடைய இயல்பில் எளிதாக படத்தில் நடித்து விடுகிறார். ஆனால் பிரியா லால் விஷயத்தில் இது சரியாக நடக்கவில்லை. அதாவது, தன்னை பிரியா பயன்படுத்திக்கொண்டார் என்பதை அவரது அப்பா மூலம் சத்யதேவ் அறியும் காட்சி. அதற்கு பின்னான பிரியா லாலின் காட்சிகள் அழுத்தமானவை. அதில் பிரியா அந்தளவு அழுத்தமாக நடிக்கவில்லை.  படத்தில் சத்யதேவின் பாத்திரத்திற்கு சைலன்சர், பிரியாவுக்கு வயலின் என்று பெயர். நிஜப் பெயரை விட இதுவே படத்தின் தன்மைக்கு மிக பொருத்தமாக ஒத்து வருகிறது. சத்யாவுக்கு, அதிக சத்தம் வராத ஒரு எஞ்சினை தயாரிப்பதே கனவ