இடுகைகள்

தனிநபர் துதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிநபரை விட தேசம் முக்கியம்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் இணையத்தில் சர்வே ஒன்றை கவனித்தேன். அதில் மோடி அவசரநிலையை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல. எதற்கு? கருப்பு பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான். அதை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது. உடனே மோடியின் பக்தர்கள் முதற்கொண்டு ஜே ஜே என கருத்துகளைக் குவித்து 51 சதவீத ஆதரவை நொடிகளில் திரட்டி விட்டனர். மோடி ஒரு தேநீர் விற்பனையாளராக அலைந்து திரிந்து உழைத்து பிரதமராக வந்தவர். முதல்வராகவும் தன் திறமையை நிரூபித்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் நாட்டை விட மோடி என்ற தனிநபரின் புகழ் உயருவது நாட்டிற்கு நல்லதல்ல. அது சர்வாதிகாரத்தன்மையையே உருவாக்கும். சிலருக்கு நேரு பிடிக்கும், சிலருக்கு காந்தி, சிலருக்கு மோடி என விருப்பங்கள் பலவாக இருக்கும். நாம் அந்தந்த காலங்களில் அவரின் செயற்பாடுகளை நல்லவிதமாக உள்ளது பலரிடமும் விவாதித்திருப்போம். இந்த இடத்தில்தான் பல்வேறு கருத்துகளின் கூடலாக அதன் நல்லவை, அல்லவை தெரிய வரும். ஆனால் மோடி அமல்படுத்திய சட்டங்களை நீங்கள் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அதன் யதார்த்த நிலைக்கு எடுத்துக்காட்டு