இடுகைகள்

மருத்துவம்- புற்றுநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கீமோதெரபி அவசியமா?

படம்
கீமோதெரபி அவசியமா ? ஐந்து பில்லியன் கீமோதெரபி சந்தையை அசைத்து பார்த்த கேள்வி இதுதான் . கேட்டவர் இந்தியாவில் பிறந்த மருத்துவர் அர்ஜூன் ஜோஷி . கல்லூரி நாட்களில் எழுத்தாளராக இருந்தவர் தாயின் வற்புறுத்தலால் மருத்துவம் படிக்கத்தொடங்கி இன்று கழுத்து , தலை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிகிறார் . " புற்றுநோய் என்றதும் இதுவரை சேமித்த குண்டுமணி தங்கம் உட்பட சுரண்டி சிகிச்சை தேடி ஓட அவசியமில்லை . புற்றுநோய்களுக்கு ஏற்ப சிகிச்சையும் மாறும் " என்று அதிர வைக்கிறார் அர்ஜூன் ஜோஷி . பால்வினையால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு கீமோதெரபி தராமல் சிகிச்சையளிக்கிறார் அர்ஜூன் . கடந்தாண்டு ஜோஷி பத்தொன்பது நோயாளிகளிடம் செய்த ஆய்வுப்படி கீமோதெரபி செய்ததில் ஒருவர் இறந்துபோக , மூவருக்கு குணமானது . தொடர்ந்த ஆய்வில் இருபதில் பதினேழு பேருக்கு கீமோ இன்றியே புற்றுநோய் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் தெரிந்தது . ஸ்டீவ் ஹென்ட்ரிக்ஸ் என்ற திசு புற்றுநோய் நோயாளியை ஆபரேஷன் மற்றும் கீமோ மூலம் காப்பாற்றியுள்ளார் அர்ஜூன் . அனைத்து புற்றுநோய்க