இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ

கல்யாணம்.... ஆஹா கல்யாணம்! - கடிதங்கள்

  கல்யாணம் ஆஹா கல்யாணம்!    வடக்குப்புதுப்பாளையம்                                                    அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நான் நேற்று பூப்புனித நீராட்டு விழா ஒன்றுக்கு சென்றேன் . பெரியம்மாவின் பேத்திக்கான விழா . அம்மாவைக் கூட்டிக்கொண்டு பூந்துறை மண்டபத்திற்கு சென்றேன் . நல்ல கூட்டம் . நான் அங்கு எதுவும் சாப்பிடவில்லை . அம்மா சாப்பிட்டுவிட்டு வந்தார் . எனக்கு சில உறவினர்களை அடையாளம் காட்டினார் . பலருக்கும் எனது சகோதரர் குமார் அளவுக்கு நான் பழக்கம் ஆகவில்லை . அதில் வருத்தம் ஏதுமில்லை . விழாவில் எனக்கு பாடம் எடுத்த கல்லூரி ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன் . எப்போதுமே பதற்றமாகவே பாடம் எடுப்பவர் , இப்போது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கல்யாணம் செய்து வைப்பதையும் வேலையாக செய்து வருகிறார் . திருமணம் பற்றி விசாரித்தார் . ஆனால் அதற்கு நான் பதில் சொல்லுவதை அவர் விரும்பவில்லை . அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்க நினைப்பதற்குள் அடைமழை பெய்வது போல அவரது திருமணம் செய்து வைக்கும் வேலைகளைப் பற்றி பேசிவிட்டு சென்றுவிட்டார் . கல்லூரியில் அவரது பாடம் நடத்தும் ப

போராட்டங்களை நடத்திய சாதனைப் பெண்கள்!

படம்
                  சாதனைப் பெண்கள் ஒலிம்பே டி காகெஸ் பாகுபாட்டிற்கு எதிராக போராடியவர் 1748 ஆம் ஆண்டு பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்தவர் . பாரிஸ் நகருக்கு 22 வயதில் இடம்பெயர்ந்தார் . சலூன்களில் கூடும் பெண்களை ஒன்றாக திரட்டி பல்வேறு அரசியல் செய்திகளை கூறத் தொடங்கினார் . இ வற்றை மையமாகவே கொண்டு அரசியல் நாடகங்களை எழுதினார் . இவருடைய இயற்பெயர் , மேரி கௌஸ் . எழுதுவதற்குத்தான் மேலேயுள்ள ஒலிம்பே டி காகஸ் . புனைப்பெயரை பெற்றோர் பெயர்களை இணைத்து வைத்துக்கொண்டார் . அரசியல் ரீதியான விமர்சனங்கள் 1793 ஆம் ஆண்டு கில்லட்டில் இவரது தலையை நறுக்கும் நிலையை ஏற்படுத்தியது . 1791 ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை சுதந்திரம் வழங்குவதற்கான ஒலிம்பே எழுதிய ஆவணம் முக்கியமானது . 1789 ஆம் ஆண்டே பிரான்ஸ் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான புரட்சி தொடங்கிவிட்டது . ஒலிம்பே எழுதியதுதான் பெண்களுக்கான முதல் சுதந்திர உரிமைகளுக்கான அறிக்கை . அதற்குப் பிறகுதான் ஆங்கில எழுத்தாளர் மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் அடுத்த அறிக்கையை எழுதி வெளியிட்டார் . எலிசபெத் கேடி ஸ்டாண்டன் அமெர

இந்தியாவில் வாழும் தேசதுரோகிகளின் பட்டியலும், விவரங்களும்!

    தேசதுரோகம் செய்த பயங்கரவாதிகள்! 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசதுரோக வழக்குகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது . இதில் தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் சதவீதம் 33.3 லிருந்து 3.3 சதவீதமாக குறைந்துவிட்டது . பிரிட்டிஷ் அரசு சுதந்திர போராட்டக்காரர்களை சிறையில் பிடித்துப் போட்டு சித்திரவதை செய்ய தேசதுரோக குற்றச்சாட்டு சட்டத்தை உருவாக்கியது . இன்று அதே மனநிலையில் இந்தியர்களை இந்தியர்களே ஆளும் நிலையிலும் சட்டம் வீறுநடைபோட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது . ஹரியானாவில் துணை சபாநாயகரின் கார் தாக்கப்பட்டது . இதில் நூறு விவசாயிகளின் மேல் தேசதுரோக குற்றச்சாட்டு பதியப்பட்டது . 124 ஏ எனும் இந்த காலனிய கால கொடுமை சட்டம் இந்தியாவில் தொடரத்தான் வேண்டுமா என உச்சநீதிமன்றம் ஜூலை 15 இல் கேள்வி எழுப்பியுள்ளது . தேச துரோகிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம் . ஆயிஷா சுல்தானா திரைப்பட இயக்குநர் டிவி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு மக்கள் மீது மத்திய அரசு உயிரியல் ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகிறது என்று மனம் திறந்து பேசினார் . ஜூன் 7 ஆம் தேதி

பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்

படம்
                டாக்டர் ஷின் சீன தொடர் தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு . இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம் . இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது . அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார் . குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார் . இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார் . இவை மாறாது நடக்கின்றன . டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால் , வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள் . ஷின்னை நாயகனாக்குவது சரிதான் . ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி , புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டுமா ? கதையில் சுவாரசியமான இடம் எதுவ