அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே சூப்பர் ஆப்!- அசத்தும் கொச்சி - நியூஸ் ஜங்ஷன்
நியூஸ் ஜங்க்ஷன்
21.7.2021
அப்படியா!
புதிய வசதி!
இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை தவிர்க்கும்படியான வசதிகளை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. யாராவது ஒருவர் வெளியிடும் செய்தி, சங்கடத்தை ஏற்படுத்தும்படி இருந்தால் அதனை எக்ஸ்ப்ளோரர் எனும் டேப் மூலம் மறைத்துவிடலாம். இதன்மூலம் நாம் பார்க்க விரும்பும், விரும்பாத செய்திகளை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ”சிலர் வெளியிடும் செய்திகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்காமல் தவிர்த்துக்கொள்ள முடியும். இப்படி செய்திகள் வெளியிடுவது எங்கள் விதிகளுக்கு புறம்பானது இல்லை” என இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. https://techcrunch.com/2021/07/20/instagram-sensitive-content-controls-explore/
சாதனை!
தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ஷெப்பர்ட் ராக்கெட் வானில் பறக்கும் காட்சி!
இடம் அமெரிக்கா, டெக்சாஸ்
அடச்சே!
ஆக்சிஜன் மரணம்!
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறந்ததாக எந்த தகவல்களும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. டில்லி, ஹரியாணா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பு கூடுதலாக இருந்தது. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததை ஊடகங்கள் பதிவுசெய்தன. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் இறந்ததாக தகவல் தெரிவிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
https://www.indiatimes.com/news/india/no-deaths-reported-due-to-lack-of-oxygen-during-covid-19-second-wave-claims-government-545396.html
ஆஹா!
உதாரண ஆசிரியர்!
கேரள மாநிலத்தில் வடகரை அருகே கீழல் என்ற கிராமத்தில் தொடக்கப்பள்ளி மாணவிக்கு, ஆசிரியர்கள் மின்சார வசதி ஏற்படுத்தி தந்துள்ளனர். ஆன்லைன் கல்வியை மாணவர்கள் கற்கிறார்களா என்று சரிபார்க்க சென்றபோது ஒரு மாணவியின் நிலை மோசமாக இருந்தது. இதனால் ஆசிரியர் கே ஸ்ரீஜன், தானே களத்தில் இறங்கி சக ஆசிரியர்களின் உதவியுடன் மாணவியின் வீட்டுக்கு மின்சார வசதியை உருவாக்கியுள்ளார். இடதுசாரி கட்சியின் இளைஞர்கள் பிரிவின் உதவியுடன் மாணவிக்கு ஸ்மார்ட்போனும் வாங்கித் தரப்பட்டுள்ளது.
https://www.newindianexpress.com/good-news/2021/jul/21/teachers-in-kerala-join-hands-to-light-up-students-house-literally-2333035.html
இது புதுசு!
சூப்பர் ஆப்
கேரளத்தின் கொச்சியில் அரசு அறிமுகப்படுத்திய புதிய ஆப்பில், பஸ், ரயில், ஆட்டோ, மெட்ரோ, சைக்கிள் என அனைத்தையும் பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. கொச்சி ஓப்பன் மொபிலிட்டி நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் மூலம் ஆப் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கேரளா புதிய ஆப் மூலம், அனைத்து போக்குவரத்து வசதிகளையும் மக்கள் பெருமையுடன் பயன்படுத்தும்படி செய்துள்ளது என கொச்சி மெட்ரோபாலிடன் நெட்வொர்க் அத்தாரிட்டி நிறுவன இயக்குநர் ஜாபர் மாலிக் கூறியுள்ளார்.
https://www.inshorts.com/en/news/kerala-to-launch-one-app-to-access-all-forms-of-transport-in-kochi-1626802431115
Two-thirds of Indians have Covid antibodies, 40 crore still at risk: ICMR
Up to two-thirds of the Indian population above the age of six have already been infected with the coronavirus, the latest nationwide serological survey conducted by the Indian Council of Medical Research (ICMR) has found. That still leaves about 40 crore people who are susceptible to the virus.The serosurvey, the fourth such exercise, was conducted in June and July, after the second wave had began to subside. A total of 28,975 people were tested for the presence of antibodies specific to SARS-CoV2 virus, and 67.6% were found to have them.
https://indianexpress.com/article/india/covid-antibodies-two-thirds-population-40-crore-vulnerable-govt-7413839/
கருத்துகள்
கருத்துரையிடுக