தேனீக்களுக்கான சரணாலயம்- கலக்கும் மோர்கன் ஃப்ரீமன்
சூழல் சார்ந்த அக்கறைகளை பிரபலங்கள் செய்யும்போது அவர்களை அவர்களின் ரசிகர்களும் பின்பற்றுகிறார்கள். இந்த வகையில் ஆங்கிலப் பட நடிகரான மோர்கன் ஃப்ரீமன், தனது 124 ஏக்கர் பண்ணை நிலத்தை தேனீக்களுக்கான சரணாலயமாக மாற்றியுள்ளார். இவர் ஏற்கெனவே பல்வேறு சூழல் சார்ந்த ஆவணப்படங்களுக்கு உதவி வருகிறார்.
2004ஆம் ஆண்டு இவான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிரேனாடா என்ற பெயரில் நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி உதவினார். தற்போது மிசிசிபியில் உள்ள தனது பண்ணையை அழிந்துவரும் தேனீக்களை பாதுகாக்க சரணாலயமாக மாற்றியுள்ளார். இதனை அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு உலகமெங்கும் தேனீக்கள் காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் என்ற பிரச்னையால் அழிந்து வருவதைக் கேள்விப்பட்டவுடன், தனது செயல்பாடுகளை தொடங்கிவிட்டார். தேனீக்களை அவற்றின் வீட்டிலிருந்து பிரித்து கொண்டு வந்து தனது பண்ணையில் வளர்க்க முயன்றார். இதற்காக லாவண்டர், மெக்னோலியா, குளோவர் ஆகிய தேனீக்களைக் கவரும் மரக்கன்றுகளை நட்டார். வாட்ஸ் பாசிபிள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து ஐ.நா அமைப்பில் திரையிட உதவினார். அமெரிக்காவிலுள்ள விவசாயத்துறை செய்த ஆய்வில் 2015 முதல் 16 காலகட்டத்தில் மட்டுமே ஏராளமான தேனீ வளர்ப்பாளர்கள் இத்துறையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேனீக்களை கொல்லும் சக்திவாய்ந்த பூச்சிக்கொல்லிகளை விற்பதற்கு அனுமதித்தது. இதற்கு சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தேனீக்கள்தான் நமது வாழ்க்கையின் அடிப்படை. அவற்றின் இருப்பில்தான் தாவரங்களும் , மனிதர்களும், விலங்கினங்களும் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது என்று சொல்லுகிறார் ஃப்ரீமன்.
மூலம்
https://allthatsinteresting.com/morgan-freeman-bee-sanctuary?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=atinewsletter
கருத்துகள்
கருத்துரையிடுக