சிறந்த டிவி, கேட்ஜெட், சூழலுக்கு உகந்த நிறுவனம், பிராண்ட்! - சந்தைக்குப் புதுசு

 

 

 

 

 

 

 

 

 

சிறந்த கேட்ஜெட்


சோனி பிளேஸ்டேஷன் 5


இந்த விளையாட்டு அதன் தரத்திலும் விலையிலும் கூட மக்களின் மனம் கவர்ந்துள்ளது. அதிநவீன டிவி இல்லாவிட்டாலும் அதிலும் இதனை இணைத்து விளையாட முடியும். எக்ஸ்பாக்ஸை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வகையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Fitbit Ace 3 se lanzará el 15 de marzo - Android Para Ti


ஃபிட்பிட் ஏஸ் 3


குழந்தைகளின் தூக்கம், விளையாட்டு ஆகியவற்றை இதன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம். கலோரி போன்றவற்றை போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கையில் கட்டிக்கொள்ள எளிதாக இருக்கிறது. அதிகநேரம் இதனை அணிந்திருந்தாலும் கூட எரிச்சல் ஏற்படுவதில்லை. வார நாட்களில் சில முறை சார்ஜ் செய்யும்படி இருக்கும்.


CES 2019: Samsung unveils 75-inch Micro LED 4K TV


சிறந்த கண்டுபிடிப்பு


சாம்சங் மைக்ரோஎல்இடி


எல்இடி ஓஎல்இடி போன்ற திரைகளில் உள்ள பலவீனத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மைக்ரோஎல்இடி வாங்கலாம் என்று முடிவெடுக்கும்படி புதிய டிவியை உ்ருவாக்கியிருக்கிறார்கள். ஒருவகையில் சாம்சங்கின் முடிவு எதிர்காலத்திற்கான முன்னடி என்று கூட சொல்லலாம். பத்தாயிரம் மணி நேரங்கள் பாதுகாப்பு என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். இப்போதைக்கு இதன் சைஸ் 110 அங்குலம் என்பதால் விரைவில் அளவு குறையும், விலையும் சல்லிசமாக மாறும். அப்போது ஆன்லைனில் எளிதாக வாங்கிக்கொள்ளலாம்.


What Is the Apple M1 Chip?


சிறந்த பிராண்டு


ஆப்பிள்


வேறெந்த நிறுவனத்தை கூறமுடியும் சொல்லுங்கள்? இன்டெல் நிறுவனத்தின் புரோச்சர்களை கைவிட்டு தனக்கென தனி சிப்களை ஆப்பிள் பயன்படுத்த தொடங்கியுள்ளது. தொண்ணூறுகளில் மிட்டாய்களின் கலர்களில் வெளிவந்த ஐமேக் திரும்ப வருகிறது. ஆனால் எம்1 சிப் திறனில் அட்வான்ஸான விஷயங்களுடன் என்பது புதுமை. மேலும் ஐபேட், மேக் என பலதும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அழகான பொருட்களை வைத்து மட்டுமே ஆப்பிள் முன்னேறி வரவில்லை. மென்பொருள், வன்பொருள் அனைத்தையும் ஆப்பிளே ஒருங்கிணைக்கிறது என்பதோடு பயனர்களுக்கான பாதுகாப்பையும் அளித்து வந்திருக்கிறது. இந்த தன்மை பலரையும் ஈர்க்கிற ஒன்று.


Real-estate investors are betting on Amazon's HQ2 pick ...


சிறந்த விற்பனையாளர்


அமேஸான்


அமேஸான் ஏறத்தாழ பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று இப்போது சொல்ல முடியாது. அற்புதமான விநியோக அமைப்பை உலகம் முழுக்க அமைத்துள்ளதால் எதை ஆர்டர் செய்தாலும் உடனே கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். கூடவே அவர்களின் பொருட்களும் இணையத்தில் சிறப்பாக விற்கின்றன. மேலும் பிரைம் சேவை, மேக கணியக சேவை, ஹப் என வளர்ச்சியில் அசத்துகிறது.


Ikea opens its first furniture store in India ...

சூழலைக் காக்கும் சிறந்த நிறுவனம்


ஐகியா


சூழலைக் காக்கிறோம் என்று பல நிறுவனங்கள் சொல்லி வந்தாலும் உண்மையில் தனது அலுவலக உணவகத்தில் தாவர புரத இறைச்சியில் உணவுகளை தயாரிப்பது, வாடிக்கையாளர்களின் பழைய பர்னிச்சர்களை தாங்களே வாங்கிக்கொள்வது, மறுசுழற்சி செய்யும் பொருட்களை கண்காட்சியாக வைப்பது என ஐகியாவின் திட்டங்கள் அனைத்து பேச்சல்ல செயல்தான்.

75" QN900A Neo QLED 8K Smart TV (2021) | QN75QN900AFXZA ...


சிறந்த டிவி


சாம்சங் க்யூஎன்900


மார்க்கெட்டில் உள்ள அட்வான்ஸ் எல்சிடி டிவி இதுதான். விலை கொஞ்சம் கண்ணில் வியர்வை வர வைத்தாலும் பல்வேறு தொழில்நுட்பங்களை காம்போவாக இணைத்து கொடுத்து பொழுதுபோக்கில் முன்னாடி சென்றுவிட்டார்கள். சுவற்றில் மாட்டிவைத்து ஆன் செய்தால் இசையில் உங்கள் மனம் மகிழும். அகன்ற திரையும், அற்புதமான திரை நுட்பமும் பொழுதுபோக்கும் நேரத்தை மறக்கமுடியாதபடி மாற்றும். இதே வரிசையில் 4 கே வைத் தாண்டி 8 கே டிவியையும் சாம்சங் தயாரிக்கிறது. ஏஐ நியோ குவாண்டம் சிப்புடன் அசத்தலாக செயல்படுகிறது.


LG 2021 OLED TVs

பெஸ்ட் ஓஎல்இடி டிவி


உலகம் முழுக்க ஓஎல்இடி டிவி பேனல்களை தயாரித்து பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பது எல்ஜிதான். அவர்களின் ஓஎல்இடி டிவி மட்டும் எப்படி சோடை போகும். ஓஎல்இடி என்ற டிவி விற்பனையை முதலில் தொடங்கியதே எல்ஜிதான். ஆல்பா 9 சிப், டிவியை கிளாஸ் டிவி என்று சொல்ல வைக்கிறது. நடுத்தர விலையில் ஓஎல்இடி டிவி வாங்க எல்ஜி பிஎக்ஸ் சரியாக இருக்கும். 4கே, ஹெட்டிஎம்ஐ 2.1, வெப்ஓஎஸ் இடைமுகம் என அசத்தலாக இருக்கிறது. சிறந்த கணினி விளையாட்டிற்கான விளையாட்டும் எல்ஜி ஜி1 மூலம் சாத்தியமாகும். ஸ்லிம்மான வடிவமும் செயல்பாடும் ஈர்க்கிறது.



டி3



கருத்துகள்