மனநலம் பற்றிப் பேசி விருது வென்ற திரைப்படம்! - ஹாங்காங் பெண் இயக்குநர் நிக்கோலா ஃபேன்

 





டாஃபோடில் என்ற  பதினெட்டு நிமிடங்கள் ஓடும் படம் உளவியல் நலம் பற்றி பேசி திரைப்பட விருது விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது. ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் , தற்கொலை செய்து இறந்துபோன அம்மாவின் நினைவுகளால் பாதிக்கப்படும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது. 

2020ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் 32 வயதே ஆன நிக்கோலா பேன். இண்டிபிளெக்ஸ் எனும் வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

2019இல் யூரோப்பியன் சினிமாட்டோகிராபி விருதை வென்று, 2020இல் வான்கூவர் ஆசியன் திரைப்பட விழாவுக்கு தகுதி பெற்றுள்ளது. எனது கல்லூரி படிப்பின்போது எனது நண்பனின் அம்மாவுக்கு உளவியல் பிரச்னை இருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையே இழுபறியாக இருக்கும்போது ஒருவர் அழுகிறாரா, சிரிக்கிறாரா என்று யார் பார்க்கப்போகிறார்கள்? இப்படி இருந்தபோது திடீரென அவரது அம்மா தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகமான நிகழ்ச்சியால் அவரது நண்பர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நாம் உளவியல் பிரச்னைகளைப் பற்றி இன்றுதான் பேசத் தொடங்கியுள்ளோம். முந்தைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்றார் இயக்குநர் ஃபேன். 

ஃபேன் அப்போது நண்பருக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நேரடியாக உதவி செய்யமுடியவில்லை. ஆனால் இப்போது இந்த படத்தின் மூலம் தற்கொலை என்பதை பொதுவான விவாதமாக பேச நினைத்தேன். தற்கொலை பற்றிய எண்ணங்களை  நேரடியாக நண்பர்களோடு பேசுவதை விட திரைப்படங்கள், நூல்கள் பெரியளவு உதவும். இன்று எனது அறிவுக்கு தற்கொலையால் பாதிக்கப்பட்ட ஒருவர் கஷ்டப்பட்டால் உதவ முடியும் என்கிறார். 

ஒருவகையில் தற்கொலையால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அல்லது நண்பருக்கு உதவுவது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. அதற்கு ஒருவர் தகுதியானவரா என சோதிப்பது அவசியம். மன அழுத்தம் கொண்டு கஷ்டப்படுபவருக்கு மனதை அதிலிருந்து வேறு விஷயங்களுக்கு திருப்ப நண்பர்களின் உதவி தேவை. பொதுவான இடங்களில் தங்கள் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்த ஒருவர் முன்வருவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறார் ஃபேங். 

ஒருவகையில் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர் தனியாக இல்லை என்ற எண்ணத்தை அவர் மனதில் ஏற்படுத்தவேண்டும் என்ற கவனத்தை ஃபேனின் படம் ஏற்படுத்தியுள்ளது. 











மூலம்

https://www.scmp.com/lifestyle/health-wellness/article/3140446/mental-health-movie-indieflix-about-womans-struggle-cope


 nicola fan details...

https://www.imdb.com/name/nm7831063/





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்