உப்புக்கு மாற்று உப்பு இருக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
மிஸ்டர் ரோனி
சாண்ட்விச்சை எப்படி எடுத்துசெல்வது?
கையில்தான் என்று சொல்லுவது அரசு பதில்கள் போல சிம்பிளாக ஆகிவிடும். இருந்தாலும் சூழல் முக்கியம் அல்லவா? அலுமினியம் பாயில்தான் எளிதாக கிடைக்கும். ஆனால் இதனை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் பாதிப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் காகிதம் என்பதை உடனே சாப்பிடுவதற்காக கொடுப்பார்கள். அதனை பார்சல் பெற்று கொண்டு செல்ல அந்த காகிதம் தாங்காது. காகிதத்தில் சுற்றி உங்கள் கேர்ள் பெஸ்டியின் பையில் வைத்துவிடுங்கள்.
உப்புக்கு மாற்றாக வேறு உப்புகள் ஏதேனும் உண்டா?
ஏன் இல்லாமல்? பொட்டாசியம் குளோரைடை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒரே பாதிப்பு, நீங்கள் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் இதைப்பற்றி அவருக்கு கூறவேண்டும். சிறுநீரக பிரச்னை இருந்து பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தினால் ஆபத்து அதிகம். உப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடிற்கும் பொட்டாசியம் குளோரைடிற்கும் ருசியில் பெரிய வேறுபாடு கிடையாது.
சயின்ஸ்போகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக