இடுகைகள்

இந்தியா பாசிட்டிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக

அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்

படம்
கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்! உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா?  இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான்.  இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை க

சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்

படம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது. இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ? இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொ

அரசு தன் கடமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்! - சேட்டன் பகத்

படம்
ஹைதரபாத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி அரசியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. அம்மாணவர், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கல்விக்கட்டணம் கட்டாததற்கு மனிதவளத்துறையின் தூண்டுதல் மூலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரோஹித்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகமே ஒழிய மனித வளத்துறை அல்ல. பண்டாரு தத்தாத்ரேயாவிடம், ஏபிவிபி மாணவர் அணி புகார் கொடுக்க அவர் உடனே மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியிடம் தொடர்புகொண்டார். மனிதவளத்துறை கொடுத்த அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை விடுதியிலிருந்து நீக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை ஏற்படுத்திய அழுத்த த்தால் மாணவர் ரோஹித்தின் உயிர் பறிபோயிருக்கிறது. இதில் அவர் தலித் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதில் நாம் பேச ஏதுமில்லை. அரசு, தரவேண்டிய உதவித்தொகையை தாமதமின்றி அனுப்பி வைத்திருக்கலாம் என்பது பற்றி இந்த விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசு தன் தரப்பிலான பிரச்னைகளை சரி செய்திருந்தால் போதுமானத

சேட்டன் பகத் - படிக்கும்போது கட்சிகளுக்கு உழைக்காதீர்கள்!

படம்
டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும், ஐஐடி ஆகிய இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஐஐடியில் வகுப்புகளை பங்க் செய்வது, கலாட்டா செய்வது, தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என ஜாலியாக இருப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு வேலையே கிடையாது.  அப்படி உள்ள மாணவர்கள் உடனே அந்நிறுவனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்கள். நாங்கள் படிக்கும்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏக்கமாக பார்ப்பது இதற்காகத்தான். எங்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். அவர்களும்  அங்கு படிக்கத்தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனுபவித்த சுதந்திரம் எங்களுக்கு பொறாமையாக இருந்தது. அரசியல் சினிமா என அவர்களுக்கு அனைத்திலும் சுதந்திரம், தனித்தனி கருத்துகள் இருந்தன. அதனை பகிரங்கமாக அவர்கள் கூறவும் முடிந்தது. ஆனால் அதேசமயம் அவர்கள் வளாகத்தில் செய்யும் அரசியல் ரீதியான போராட்டங்களை நான் ரசிக்கவில்லை. காரணம், மாணவர்கள் கல்லூரிக்கு வருவது தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே. இதில் அரசியல் கட்சிகளுக்கு உதவும்படியான நடவடிக்கைகள் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. கருத்து சுதந்திரத்தை

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கும் உண்டு!

படம்
நேர்காணல்! சேட்டன் பகத் பைவ் பாயிண்ட் சம்ஒன் என்ற நாவலுடன் தொடங்கிய இலக்கியப்பயணம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பத்தி எழுத்துகளையும் எழுதி வருகிறார். அரசு திட்டங்கள், நாட்டின் பிரச்னைகள் என ஒன்றுவிடாமல் இவர் யோசித்து எழுதிய கட்டுரைகளை திரட்டி இந்தியா பாசிட்டிவ் என்று பெயரிட்டு நூலாக்கியுள்ளார். அனைத்து நாவல்களும் நாட்டின் பிரச்னைகளை பேசியவையே என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி? அது உண்மைதான். நீங்கள் என்னுடைய பைவ் பாயிண்ட் சம் ஒன்  நூலில் கல்வி முறைகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பேன். 2 ஸ்டேட்ஸ் நாவலில் தென்னிந்தியா - வட இந்தியா வேறுபாடுகளை விமர்சித்து எழுதியிருப்பேன். தி கேர்ள் இன் ரூம் நெ.105 நூலில் காஷ்மீர் பிரச்னைகளைப் பேசியிருப்பேன். நான் எழுதும் நூல்கள் அனைத்திலும் நாட்டை உலுக்கும் ஏதாவது பிரச்னையைப் பற்றி பேசியிருக்கிறேன். இப்போது நீங்கள் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையாக நாட்டின் பிரச்னைகளை பேசலாம் என்று நினைக்கிறீர்களா? நாவல், கட்டுரை என்ற இருவடிவங்களுமே எனக்க