அரசியலுக்கு வரும் ஆசை எனக்கும் உண்டு!





Image result for india positive chetan bhagat





நேர்காணல்!


சேட்டன் பகத்

பைவ் பாயிண்ட் சம்ஒன் என்ற நாவலுடன் தொடங்கிய இலக்கியப்பயணம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பத்தி எழுத்துகளையும் எழுதி வருகிறார். அரசு திட்டங்கள், நாட்டின் பிரச்னைகள் என ஒன்றுவிடாமல் இவர் யோசித்து எழுதிய கட்டுரைகளை திரட்டி இந்தியா பாசிட்டிவ் என்று பெயரிட்டு நூலாக்கியுள்ளார்.

அனைத்து நாவல்களும் நாட்டின் பிரச்னைகளை பேசியவையே என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி?

அது உண்மைதான். நீங்கள் என்னுடைய பைவ் பாயிண்ட் சம் ஒன்  நூலில் கல்வி முறைகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பேன். 2 ஸ்டேட்ஸ் நாவலில் தென்னிந்தியா - வட இந்தியா வேறுபாடுகளை விமர்சித்து எழுதியிருப்பேன். தி கேர்ள் இன் ரூம் நெ.105 நூலில் காஷ்மீர் பிரச்னைகளைப் பேசியிருப்பேன். நான் எழுதும் நூல்கள் அனைத்திலும் நாட்டை உலுக்கும் ஏதாவது பிரச்னையைப் பற்றி பேசியிருக்கிறேன்.

இப்போது நீங்கள் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையாக நாட்டின் பிரச்னைகளை பேசலாம் என்று நினைக்கிறீர்களா?

நாவல், கட்டுரை என்ற இருவடிவங்களுமே எனக்கு பிடித்தவைதான். இந்தியாவில் உள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றி நாவலாக எழுதலாம். கட்டுரையாக சில விஷயங்களை எழுதும்போது நாட்டின் மக்களை இன்னும் பரவலாக சென்றடைய முடியும் என நான் நம்புகிறேன்.

நாட்டில் இன்று பெண்களின் பாதுகாப்பு, மாற்று பாலினத்தவர் பிரச்னைகள் சிக்கலாகி வருகிறது. இது பற்றி தங்கள் கருத்து?

நான் மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்து இன்றுவரை எதுவும் எழுதவில்லை. அவற்றை எப்படி எழுதுவது என்பது குறித்து இன்னும் முழுமையான திட்டம் உருவாகவில்லை. நான் எழுதிய ஒன் இந்தியன் கேர்ள் நாவல், பெண்ணியம் பேசுகிற நாவல்தான். அது இன்றைய பெண்களின் பிரச்னைகளை பேசுகிற, அவர்களோடு உறவாடுகிற தன்மை கொண்டதுதான்.


இன்று இந்தியாவில் எழும் பிரச்னைகளைப் பற்றி அனைவரும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலும் நம்பிக்கையின்மையை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நூல் அதை மாற்றும் என நம்புகிறீர்களா?

நான் இந்த நூலில் பாசிட்டிவான முறையில் எளிமையான தீர்வுகளை சொல்லியிருக்கிறேன். இது பிறரால் விமர்சிக்கப்பட்டாலும் சரி. நான் நடைமுறைக்கான மனிதன் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.


அனைவருக்குமான சமுதாயம் என்று நூலில் எழுதியிருக்கிறீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்.

நான் கூறிய அனைவருக்குமான சமூகம் என்பது கம்யூனிசம் போன்றதல்ல. அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கும் முறை என்று நீங்கள் புரிந்துகொள்ளுவது சரி.


நீங்கள் முக்கியமாக தீர்க்கும் பிரச்னை என்று எதைக் கூற விரும்புகிறீர்கள்?

நாம் ஏழை நாடு என்பதால், பொருளாதாரரீதியாக முன்னேறினாலே பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகிறேன்.



மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முன்வந்திருக்கிறீர்கள். வரவேற்கலாம். அரசியல் ஆசை உள்ளதா?

நான் அதைப்பற்றி யோசித்து வருகிறேன். ஆனால் இப்போது நான் எழுதுவதையே அதிகம் விரும்புகிறேன். அரசியல் என்பது முழுநேர வேலை. அதற்காக நிறைய விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.

இப்போது என்ன எழுதிவருகிறீர்கள்?

நான் புதிய நாவல் ஒன்றை எழுதி வருகிறேன். அதோடு இன்ஸ்டாகிராமில் சுய முன்னேற்றம் சார்ந்து நிறைய எழுதி வருகிறேன்.

தந்தையர் தினம் உங்களுக்கு முக்கியமானது. உங்களது மகன்களைப் பற்றி சொல்லுங்கள்.

சியாம், இஷான் ஆகிய இருவரும் அவர்களது வயதுக்கான பல்வேறு நூல்களை படித்து வருகிறார்கள். நாங்கள் பேசுவோம், விளையாடுவோம், பயணிப்போம். என்னுடைய வேலைகளுக்கு இடையே முடிந்தவரை அவர்களோடு நேரம் செலவழித்து வருகிறேன்.


நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் - சோனாலி ஷெனாய்