ஆவின் கண்ணாடி பாட்டில்களுக்கு மாறுகிறதா?
பிளாஸ்டிக் தடைகளுக்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. தற்போது அரசு நிறுவனமான ஆவின் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டு பாலை கண்ணாடி பாட்டில்களில் வழங்க உள்ளது. இது சாத்தியமா இல்லையா என அரசு கணக்கு போட்டுக்கொண்டு உள்ளது.
இதோ டேட்டா
ஆவினுக்குச் சொந்தமான பார்லர்கள் 750
தனியார் பார்லர்கள் 3 ஆயிரம்
தினசரி பால் விநியோகம் - 12.5 லட்சம் லிட்டர் - நகரில் மட்டும்.
கண்ணாடி பாட்டில்கள் தேவை எனில் 25 லட்சம் பாட்டில்கள் தேவை - 500மி.லி பாலுக்கு.
பால் விநியோகம், பயன்பாடு, சுத்தம் செய்து தர தேவைப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை 75 லட்சம்.
தற்போது பயன்படும் கவர் பாலிபிலிம் பிளாஸ்டிக்குக்கு செலவு 40 பைசா. 500 மிலி கவருக்கு.
கண்ணாடி பாட்டில்களுக்கு 20 முதல் 23 ரூபாய் வரையில் செலவாகும்.
நன்றி: டைம்ஸ் - சித்தார்த் பிரபாகர்