இடுகைகள்

மைக்ரோசாஃப்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பன்மை கலாசாரத்தை விரும்பும் இந்தியன் நான்! - சத்யா நாதெள்ளா

படம்
infinityleap சத்யா நாதெள்ளா , மைக்ரோசாப்ட் இயக்குநர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைத் தாண்டி , புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாதித்த சாதனைகள் அதிகம் . மைக்ரோசாப்டின் குறைகளை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அந்நிறுவனப் பிரிவுகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சத்யா . அவரிடம் டெக் துறை , வளர்ச்சி , இந்தியா பற்றி பேசினோம் . செயற்கை நுண்ணறிவு பற்றி நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள் . அதாவது , அத்துறைக்கான விதிகளை வகுக்குமாறு பேசியிருந்தீர்கள் . டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசி விஷயங்களை சரியாக கடைபிடிக்கின்றனவா ? தொழில்நுட்பம் என்பது ஒரேமாதிரிதான் . ஆனால் அதனை கடைப்பிடிக்க சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன . உணவுபாதுகாப்புத் துறைக்கு விதிகள் இருப்பது போலவே , விமானத்துறைக்கும் விதிகள் உண்டு . அதேபோல செயற்கை நுண்ணறிவு துறைக்கும் தனியான விதிகள் இயற்றப்படவேண்டும் . பயனரின் அந்தரங்கம் என்பது அவரின் உரிமை . அது பாதுகாக்கப்படவேண்டும் . நாங்கள் ஐரோப்பாவின் விதிமுறைகளை உலகம் முழுக்க பின்பற்றுகிறோம் . கடு

மூன்று நாட்கள் வீக் எண்ட் - ஜப்பான் மைக்ரோசாப்ட் சோதனை!

படம்
giphy.com பத்திரிகைகளுக்கு எப்போதுமே லீவு கிடையாது. லீவு விட்டால் செய்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். ஆனால் புரடக்டிவிட்டி என்று பார்த்து, ஐடியாக்களை தேடினால் மணிக்கணக்கில் நீளும் மீட்டிங்கில் எல்லாரும் தேவாங்கு போல உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தடுத்த ஐடியா என கேட்கும்போது, முதலில் பேசியவர் போனில் சமூகவலைதளத்தில் உறைந்துவிடுவார். இப்படியே ஆபீஸ் மீட்டிங் அத்தனை கஷ்டங்களையும் சொல்லிவிடும். இதற்கு ஒரே பதில்தான். லீவு வேண்டும். மைக்ரோசாப்ட் - ஜப்பான் இதற்காகவே 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை சொல்லி, பிற பஞ்சாயத்துகளை ஆப் மூலம் செய்தி பரிமாறி செய்தனர். என்ன ஆச்சரியம் ஊழியர்களின் பணித்திறன் முன்பை விட 40 சதவீதம் மேம்பட்டிருந்தது. காரணம் மூன்று நாட்கள் வீக் எண்டாக கம்பெனி கொடுத்ததுதான். வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் என்பதுதான் மைக்ரோசாஃப்ட் இதற்கு சூட்டிய பெயர். தனிநபர்களாக செய்த விற்பனை அளவில் இதனை கண்டறிந்துள்ளனர். 92 சதவீத பணியாளர்கள் நான்குநாட்கள்தான் வேலை என்பதற்கு மகிழ்ந்தனர். பிரிண்ட் எடுக்கும் செலவு 59 சதவீதம் குறைந்தது. மின் செலவு 23 சதவீதம்

உண்மையைப் பேசிய சுயசரிதை! - சத்யா நாதெள்ளாவின் ஹிட் ரெஃப்ரெஷ்

படம்
பிசினஸ் இன்சைடர் ஹிட் ரெஃப்ரெஷ் சத்யா நாதெள்ளா தமிழில்: பூ. சோமசுந்தரம் வெஸ்ட்லேண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் வாழ்க்கையை செலவழித்து முடித்தவர் சுயசரிதையை எழுதினால் அது இயல்பானது. முக்கியமான அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்டில் இயக்குநராக தொடரும்போது, ஒருவர் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார் என்றால் அது பலராலும் புதுமையாகத்தானே பார்க்கப்படும்.  அப்படித்தான் நூலை நான் படிக்கத்தொடங்கினேன். இது எப்போதும்போலான ஒரு சுயசரிதை நூலாக இல்லை. காரணம் இதனை எழுதியுள்ள சத்யாவின் எண்ணங்களும் எழுத்துக்களும்தான். தொழில்சாதனைகளைப் பேசுபவர்கள் அவ்வளவு எளிதில் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மூச்சு விடமாட்டார்கள். சத்யா, பிற மேற்கத்திய ஆட்களிடமிருந்து வேறுபடுவது இங்குதான். இயல்பாக தன் மூளைவாத குழந்தை பற்றியும், அப்போதைய அலுவலக நெருக்கடியையும் பதிவு செய்கிறார். கூடவே மறக்காமல் நிறுவனம் பினதங்கியுள்ள விஷயத்தையும் நறுக்கென சுட்டிக்காட்டுகிறார். விசுவாசம் என்பதை விட எதைக் கவனிக்காமல் விட்டோம், எங்கே தவறினோம் என்று பதிவு செய்த முதல் நூலாக இது இருக்கலாம். தனது சொந்த வாழ்க்கை, மூளைவாத குழந்

மைக்ரோசாஃப்டின் இன்டெலி மவுஸ்- 20 ஆண்டு கொண்டாட்டம்

படம்
மைக்ரோசாப்ட் மவுஸூக்கு இருபது வயது ஆச்சு! முதலில் நாம் எப்படி ஒரு மவுஸைப் பயன்படுத்தி வந்தோம் தெரியும் அல்லவா?  மவுசை அசைத்து எம்எஸ் பெயிண்டில் ஒரு கோடு போட, மவுஸ் பேடு தேவை. அதில் வாரத்திற்கும் ஒருமுறையேனும் துடைத்து வைத்திருக்கும் லேட்டரல் திங்கிங் மனம் தேவை.  இல்லையென்றால் மவுசும் நகராது நம் வேலையும் இம்மியளவுகூட முன்னே நகராது. அப்போதுதான் அறிமுகமானது மைக்ரோசாஃப்ட் ஆப்டிகல் மவுஸ். கீழே எல்இடி விளக்குடன் குண்டுமணி இல்லாத ஒரே மவுஸ். இன்றுவரை சந்தையை மாற்றிய கண்டுபிடிப்பு அதுவே.ஆனால் அப்போது அதன் விலை 75 டாலர்கள் - 100 டாலர்கள் வரை கேட்டனர்.  அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் நடைபெற்ற காம்டெக்ஸ் என்ற எலக்ட்ரானிக் ஷோவில்(சிஇஎஸ் போலத்தான்) அறிமுகமானது இந்த மவுஸ். இதற்கு பெயர் இன்டெலி மவுஸ்.  இந்த மவுசின் தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் ஸெராக்ஸ் கணினி நிறுவனத்தோடு இணைந்து சந்தைப்படுத்தியது. ஆண்டு 1981. அப்போது அதன் விலை 16, 500. இன்று அதன் விலையை ஒப்பிட்டால், 45 ஆயிரம் டாலர்கள் வரும். ஆனால் இவையெல்லாம் வணிக கணினிகள். இதனைப் பயன்படுத்துவதற்கான மவுஸ் பேடுகள் கூட