இடுகைகள்

கோமியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

படம்
          மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது . டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது . அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன . இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது , விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் . இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது ? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான் . புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ .10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும் . பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று . காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது , மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது . இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன . விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர் .