தலைவர், நம்பிக்கைக்குரியவராக தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்பவராக இருக்கவேண்டும்!
பில் ஃபோர்ட் எக்சிகியூட்டிவ் சேர்மன்,போர்ட்மோட்டார் கோ. நீங்கள் நிறைய நிறுவனத் தலைவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன? நீங்கள் நம்பும் விஷயங்களை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள வேண்டும். செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்க தயங்கவே கூடாது. சிறந்த தலைவராக இருக்க இந்த அம்சங்கள் முக்கியம். மின்வாகனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் நிறுவனத்திற்கு உள்ள எதிர்காலம், போட்டி ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள். மின்வாகனங்களை வாங்குபவர்கள், இன்னொரு மின்வாகனத்தை வாங்கவேண்டுமென நினைக்கிறார்கள், இதற்கான சார்ஜிங் மையங்கள் கூடும்போது, கார்களின் விலை குறையலாம். நாம் சில விஷயங்களை திட்டமிட்டு இயங்கலாம். ஆனால் நிறைவேறும் காலத்தை உறுதியாக கூற முடியாது. நம் அனைவரிடமும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மின்வாகன விற்பனை நிறுவனமாக உள்ளோம். கலப்பு வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களையும் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். மின்வாகனங்கள் தொடர்பான அரசியல் விவாதங்களை...