கருப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகள் - ராமோகி ஹூமா, எரின் ஹார்ன் மெக்கின்னே

 











ராமோகி ஹூமா

ramogi huma


1995ஆம் ஆண்டு, டோனி எட்வர்ஸ் என்ற விளையாட்டு வீரரை, விளையாட்டு சங்கம் 150 டாலர் மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றார் என்று புகார் சொல்லி விளையாட தடை விதித்தது. அதை எதிர்த்து போரிட்ட வழக்குரைஞர் ராமோகி ஹுமா. அப்போது அவர், இப்படியெல்லாம் புகார் கூறி தடைவிதிக்க தொடங்கினால், டோனி தன்னுடைய ஜெர்சியை விற்றால் கூட அதையும் விதியைக்காட்டி தவறு என்று சொல்லி தண்டனை விதிப்பார்கள் என்று கூறி விமர்சித்தார். 


இந்த வழக்குக்கு பிறகு ஹூமா, தேசிய கல்லூரி வீரர்கள் சங்கம் என்ற அமைப்பை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் இனவெறி, மதம், உதவித்தொகை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களை எப்படி விளையாட்டு சங்கம் பயன்படுத்தி சம்பாதிக்கிறது என்ற அறிக்கையை கல்லூரி பேராசிரியர் எல்லன் ஜே ஸ்ட்ராவோஸ்கியுடன் சேர்ந்து வெளியிட்டார். ஹூமாவின் செயல்பாடு காரணமாக பேஸ்பால் விளையாட்டு சங்கம், மூன்றாவது தரப்பு நிதியுதவியை வீரர்கள் பெறலாம் என அனுமதித்துள்ளது. அவர்களுக்கு தகுதிக்குரிய கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியில் விளையாடும் வீரர்களுக்கு உரிய தொகையை அவர்களுக்கு வழங்கவேண்டும். விளையாட்டு வீரர்களை ஊழியர்களாக கருதி அவர்கள் யூனியன் அமைக்க அனுமதி வேண்டி போராடி வருகிறார். வரலாற்றில் நீங்கள் சரியான தரப்பில் நிற்கிறீர்கள் என்று உணர்ந்தால், எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிறார் ஹூமா.    

டைம் வார இதழ் 



-சீன் கிரிகோரி



எரின் ஹார்ன் மெக்கின்னே


erin horne mckinney


2021ஆம் ஆண்டு, அமெரிக்காவில் 1,61,000 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பெரு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆகும். முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் இது போதாது என எரின் கூறுகிறார். இதற்கு ஒரே வழியாக சுயதொழிலை தொடங்குவது சிறப்பானது என வழிகாட்டுகிறார். 


வங்கியின் கடன் வேண்டி விண்ணப்பித்தால், வெள்ளையர்களை விட கருப்பினத்தவர்களை மூன்று மடங்கு அதிகமாக நிராகரிக்கிறார்கள் என்று கோல்ட்மேன் சாக்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு தகவலைக் கூறியுள்ளது. எரின் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் கருப்பின தொழிலதிபர்களுக்கான மையத்தை நடத்திவருகிறார். இந்த மையம், நான்கு கருப்பின கல்லூரி, பல்கலைக்கழகங்களோடு வரலாற்று ரீதியாக தொடர்புகொண்டுள்ளது. எரின், சந்தையில் வெற்றி பெற்ற வணிக மாதிரிகளை ஆராய்ந்து வருகிறார். அதில் கிடைக்கும் முடிவுகளை கருப்பினத்தவர்களுக்கு கொடுக்கிறார். புதிய தொழில்களை தொடங்குவதற்கு உதவி, கடன்களை பெற்றுத்தரவும் முயற்சிகளை செய்து வருகிறார். 


டைம் வார இதழ்


கருத்துகள்