கருப்பின பாகுபாட்டால் உதவித்தொகையைப் பெற முடியாமல் தவித்த நீச்சல்வீரர்

 














அட்ரியானா பார்போஸா

adriana barbosa


பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோவில் வாழும் பெண்மணி. ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட தடுமாறும் பொருளாதார சூழ்நிலை. அவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வறுமையான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாட்டில், கருப்பினத்தவரை விட வெள்ளையர்கள் 74 சதவீத அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க - பிரேசிலியர்கள் வெள்ளையர்களைப் போல கல்வித்தகுதியைக் கொண்டிருந்தாலும் கூட சம்பள விஷயத்தில் 70 சதவீதம்தான் பெற்றுக்கொண்டிருந்தனர். 


இதையெல்லாம் அறிந்த அட்ரியானா, இருபது வயதில் கருப்பின மக்களுக்காக ஃபெய்ரா பிரேட்டா விழாவை உருவாக்கினார். இந்த விழாவில் இசை, நாடகம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளோடு சுயதொழில் முனைவோர் தங்களது பொருட்களையும் விற்கலாம்.  பல்வேறு தனியார் நிறுவன நன்கொடை மூலம் கருப்பினத்தவர் தொழில் செய்ய 2.2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி கருப்பின தொழிலதிபர்களுக்கு உதவும் பாதை எளிமையாக இல்லை. ஒருமுறை விழாவில் சேகரமான டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வெள்ளையர்கள் தங்கள் தெருவில் விழாவை நடத்தக்கூடாது என தகராறு செய்தனர். அட்ரியானா இதையெல்லாம் சமாளித்துத்தான் விழாவை நடத்துகிறார். விழாவிற்கு தோராயமாக 2 லட்சம் பேர் வருகிறார்கள். 


கட்டுமானம், உடை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பத்தாயிரம் கருப்பின தொழில்முனைவோர்களோடு பிரேட்டா ஹப் இயங்குகிறது. கருப்பின பெண்களில் மூன்றில் இருபங்கினர் பல்கலைக்கழக கல்வியைப் பெறுவதில்லை. அவர்களுக்கு அட்ரியானா உதவுகிறார். வீட்டு வாடகை என்ற பிரச்னையில்தான் அனைத்தும் தொடங்கியது. இன்று, நாங்கள் பெரிய சமூக அமைப்பாக வளர்ந்திருக்கிறோம். கருப்பின மக்களுக்கான சந்தையை உருவாக்கியுள்ளோம் என்றார் அட்ரியானா. 


-சான்யா மன்சூர்


3


ரெபக்கா அஜூலு பஸெல்


rebecca ajulu bushell


ரெபக்கா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். அப்போது, அவருக்கு புகழ்பெற்ற கேலரி ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு கிடைத்த உதவித்தொகை எதிர்பார்த்ததை விட குறைவு. அத்தொகை அவரின் பயணச்செலவுக்கு கூற போதவில்லை. கேலரியின் உரிமையாளருக்கு நெருக்கமாக உள்ளவர்களின் ஆதரவு கிடைத்தால், உதவித்தொகை கூடுதலாக கிடைக்கும். இல்லையெனில் நெருக்கமாக உள்ளவர்களில் யாரேனும் ஒருவர் இறக்கும்வரை காத்திருக்கவேண்டும் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது. ரெபக்கா மேற்சொன்ன இரண்டு யோசனைகளையும் ஏற்கவில்லை. 


இத்தனைக்கும் ரெபக்கா உலகின் நம்பர் 1 நீச்சல் வீரராக சாதித்தவர். பிரிட்டனின் தேசிய அணிக்காக விளையாடியவர் என்ற பெருமையெல்லாம் கூட நடைமுறை வாழ்க்கையில் உதவவில்லை. ஆப்பிரிக்க கருப்பின அப்பாவிற்கும், வெள்ளை இன அம்மாவுக்கும் பிறந்தவர் ரெபக்கா. தொடக்க காலத்தில், பதிமூன்று வயது வரை அப்பாவுடன் கென்யாவில் வளர்ந்தார். அங்கு அவரை வெள்ளை இன பெண்ணாக கருதினர். பாகுபாடு, அநீதி இதற்குப் போராடும் விஷயங்களை ரெபக்கா அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டார். பிறகு பிரிட்டன் வந்தபோது கருப்பின பெண்ணாக அடையாளப்படுத்தினர். நீச்சல் விளையாட்டு வெள்ளை இன வீரர்களுக்கானது. அதில் ஈடுபட்டபோது நிறவெறி அச்சுறுத்தல்களை சந்தித்தார். ஆனாலும் சாதனைகளை செய்தவர், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பயிற்சியிலிருந்து விலகிக்கொண்டார். உளவியல் ரீதியாக நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். தனது 29 வயதில் 10,000 இன்டர்ன்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். 3 ஆண்டுகளில், கருப்பின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார். நாங்கள் செய்யும் உதவி மாணவர்களுக்கு முன்னோக்கி உந்தித்தள்ளும். இல்லையெனில் அவர்கள் கீழ்நோக்கி வீழ்த்தப்படுவார்கள் என்றார் ரெபக்கா. 


திஸ் ஹெவி பிளாக் போன்ஸ் என்ற தனது சுயசரிதையை ரெபக்கா எழுதி வருகிறார். அதில் தான் சந்தித்த நிறவெறி அனுபவங்களை வெளிப்படையாக கூறுவார் என நம்பலாம். 


-தாரா லா

டைம் வார இதழ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்