கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

 









Graeme hart

rank group


க்ரீம் ஹார்ட்

தலைவர், ரேங்க் குழுமம்

வயது 58

நியூசிலாந்து


க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது. 


அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 மில்லியன் டாலர்களை அளித்துள்ளனர். ஒடாகோ பல்கலைக்கழகம் தொடங்கி 150 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நீண்ட பயணத்தில் தனிநபர் நன்கொடையாக கிடைத்த தொகையில் இதுவே அதிகம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


-ஆர்டியன் விபிசோனோ


ஜேம்ஸ் பேக்கர் 


நிறுவனர், பேக்கர் பவுண்டேஷன் 

வயது 56 ஆஸ்திரேலியா 


james packer

packer family foundation


ஆஸ்திரேலிய தொழிலதிபர் பேக்கர், மனநிலை சார்ந்த பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர். எனவே, இதுபற்றிய ஆராய்ச்சிக்கென 4.5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார். தனது மனநலப் பிரச்னையை வெளிப்படையாக கூறியவர், இதுபற்றிய ஆராய்ச்சி தன்னைப்போல பிரச்னையில் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவும் என கருத்து தெரிவித்துள்ளார். 


2014ஆம் ஆண்டு பேக்கரும் அவரது சகோதரி கிரேடல் ஆகியோர் மொத்தம் 200 மில்லியன் டாலர்களை கலை தொடர்பான அமைப்புகளுக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தனர். இந்த உதவி பத்து ஆண்டுகளுக்கு தொடரவிருக்கிறது என கூறினர்.  

-ஒய்ஆர்


eddy kusandi sariaatmadja

emtek

எட்டி குஸ்னாடி சரியாட்மாத்ஜா

நிறுவனர், எம்டெக்


வயது 70 இந்தோனேஷியா 



ஊடகதொழில்களை செய்யும் தொழிலதிபர், பார்வைத்திறன் சார்ந்த பிரச்னைகளுக்கு நிதியுதவி வழங்கிவருகிறார். கண்புரை, இதழ் பிளவு, ஹெர்னியா ஆகிய நோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து வருகிறார். இதற்கென கார்யா ஆல்பா ஒமெகா பவுண்டேஷனை வைத்திருக்கிறார். 


நடப்பு ஆண்டில் 4 மில்லியன் டாலர்கள் செலவில் செயற்கை லென்ஸ்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறார். இதன் மூலம், ஆண்டுக்கு 5 ஆயிரம் ஜோடிகள் லென்ஸ்கள் தயாரிக்க முடியும். இதை இலவசமாக நோயாளிகளுக்கு தனது பவுண்டேஷன் மூலம் வழங்குவதே எடியின் திட்டம். 2010ஆம் ஆண்டு முதல் மூன்று லட்சம் பேர்கள் எடியின் உதவி மூலம் பயன்பெற்றுள்ளனர்.  1983ஆம் ஆண்டு எம்டெக் என்ற நிறுவனத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். அப்போது, காம்பேக் பிராண்ட் கணினிகளை வாங்கி விற்கும் விநியோகஸ்தராக இருந்தது. இப்போது எம்டெக்கிற்கு நான்கு டிவி சேனல்கள் சொந்தமாக உள்ளன. 2018ஆம் ஆண்டு, எடி பத்து மில்லியன் இந்தோனேஷியா ரூபாயை பாண்டுங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அமைப்பிற்கு வழங்கினார். எடியின் பவுண்டேஷன் சில தனியார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவக்கருவிகளை வாங்க நிதியுதவிகளை வழங்கி வருகிறது. 


-ஜிஎச்


nikhil kamath

co founder,zerodha


நிகில் காமத்

துணை நிறுவனர், தலைமை நிதி அதிகாரி ஜெரோதா

வயது 37 இந்தியா


இந்தியாவில் சொத்துகளை தானமாக வழங்கும் கிவ்விங் பிளெலெட்ஜில் கையெழுத்திட்ட நான்காவது நபர். 37 வயது தொழிலதிபர், காலநிலை மாற்றம், ஆற்றல், கல்வி, உடல்நலம் ஆகியவற்றின் மேல் அக்கறை காட்டி செயல்பட்டு வருகிறார். யூட்யூபில் பாட்காஸ்ட் தொடர் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் விருந்தினர்கள், நிகில் ஆகியோர் இணைந்து 10 மில்லியன் டாலர்களை சமூக செயல்பாடுகளுக்கு வழங்கியுள்ளனர். இந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி, மனநலன் சார்ந்த இருநிறுவனங்களுக்கு நிதி கிடைத்துள்ளது. யூட்யூப் மூலம் கிடைக்கும் நிதியை 40 மில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளார். நிகிலின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் ஆகும். முதலாளித்துவத்தின் விளைவாகவே பாகுபாடுகள் உருவாகின்றன. நான் முதலாளித்துவத்தை, பாகுபாட்டை சரி தவறு என்று கூற விரும்பவில்லை. இந்த இரண்டுமே இங்கு இருக்கின்றன என மக்களுக்கு காட்ட விரும்பினேன் என்று கூறுகிறார். 


அட்ரியன் செங்

தலைவர், இயக்குநர் நியூவேர்ல்ட் டெவலப்மென்ட்

வயது 44  ஹாங்காங்க்


adrian cheng

new world development


2021ஆம் ஆண்டு, வெம்ப் பவுண்டேஷனைத் தொடங்கி ஹாங்காங்கிலுள்ள வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். இதுவரை இந்த தன்னார்வ அமைப்பு, 16 ஆயிரம் குழந்தைகளுக்கு உதவியுள்ளது. நேரடியாக மக்களுக்கு உதவி செய்யும் வழியை தகர்க்க விரும்பினேன். இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக உருவாகி வளருவார்கள். எனவே, அவர்களுக்கு ஏற்ப கலாசாரம், சமூகத்தின் மதிப்புகள், மனநிலை ஆகியவற்றை சிறப்பாக உருவாக்கவேண்டும். இதன்மூலம் மக்கள் அவர்களுக்குள் சிறப்பான உறவுகளை உருவாகி, இசைவான சமூகத்தை உருவாக்கிக் கொள்வதோடு சமூகத்திற்கும் தேவைக்கு ஏற்ப பங்களிப்பார்கள் என்று அட்ரியன் செங் கூறினார். 

-ஜேகே

ஃபோர்ப்ஸ் இந்தியா 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்