இடுகைகள்

வனத்துக்குள் திருப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

படம்
  பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர்.  மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும்.  “மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வளர்ப்பதும் வேறு வேறான பணிகள். அரசு