இடுகைகள்

செவ்விந்தியர்களின் வக்கீல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடிகளின் வக்கீல்!

படம்
பழங்குடிகளின் வக்கீல் ! 1844 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் பிறந்த கரோலினா வெல்டனின் ஐந்து வயதிலேயே இவரின் பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர் . தன் அம்மாவுடன் 1850 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ப்ரூக்ளினுக்கு வந்தார் . இரு திருமணங்கள் செய்த கரோலினாவுக்கு இரண்டுமே மனநிம்மதியை இழக்கச்செய்தன . பழங்குடிகளுக்கு ஆதரவாக போராடிய தேசிய இந்திய பாதுகாப்பு சங்கத்தில் இணைந்தார் கரோலினா . 1887 ஆம் ஆண்டு பழங்குடி மக்களின் நிலங்களை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டது (Dawes act). பழங்குடிகளின் ஸ்டேண்டிங் ராக் பகுதியின் உரிமைக்காக போராடிய சிட்டிங் புல்லின் செயலாளராக 1889 ஆம் ஆண்டு  கரோலினா பணியாற்றினார் . நண்பராக நேர்மையாகவும் , கணவராக பாசமாகவும் , தேசப்பற்றாளராக துணிச்சலாகவும் கறைபடியாதவராகவும் சிட்டிங்புல் இருந்தார் என தன் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கரோலினா . அரசும் பத்திரிகைகளும் சிட்டிங்புல்லின் வெள்ளை மனைவி என தரம்தாழ்ந்து பேசினாலும் பழங்குடிகளின் நிலத்தை மீட்கும் போராட்டம் தளரவில்லை . 1890 ஆம் ஆண்டு டிச .15 அன்று சிட்டிங்புல் கொல்லப்படும் முன்பே வெல்ட