பழங்குடிகளின் வக்கீல்!




Image result for indigenous advocate carolina weldon



பழங்குடிகளின் வக்கீல்!

1844 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் பிறந்த கரோலினா வெல்டனின் ஐந்து வயதிலேயே இவரின் பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். தன் அம்மாவுடன் 1850 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ப்ரூக்ளினுக்கு வந்தார். இரு திருமணங்கள் செய்த கரோலினாவுக்கு இரண்டுமே மனநிம்மதியை இழக்கச்செய்தன.


பழங்குடிகளுக்கு ஆதரவாக போராடிய தேசிய இந்திய பாதுகாப்பு சங்கத்தில் இணைந்தார் கரோலினா. 1887 ஆம் ஆண்டு பழங்குடி மக்களின் நிலங்களை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டது(Dawes act). பழங்குடிகளின் ஸ்டேண்டிங் ராக் பகுதியின் உரிமைக்காக போராடிய சிட்டிங் புல்லின் செயலாளராக 1889 ஆம் ஆண்டு  கரோலினா பணியாற்றினார். நண்பராக நேர்மையாகவும், கணவராக பாசமாகவும், தேசப்பற்றாளராக துணிச்சலாகவும் கறைபடியாதவராகவும் சிட்டிங்புல் இருந்தார் என தன் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கரோலினா. அரசும் பத்திரிகைகளும் சிட்டிங்புல்லின் வெள்ளை மனைவி என தரம்தாழ்ந்து பேசினாலும் பழங்குடிகளின் நிலத்தை மீட்கும் போராட்டம் தளரவில்லை. 1890 ஆம் ஆண்டு டிச.15 அன்று சிட்டிங்புல் கொல்லப்படும் முன்பே வெல்டனின் மகன் தொற்றுநோயால் இறந்துபோனான். பின் 1921 ஆம் ஆண்டு வீடு நெருப்புக்கு இரையாக தீக்காயங்களுடன் இறந்துபோனார் கரோலினா

பிரபலமான இடுகைகள்