லிஸ்டில் அடுத்ததாக வாங்க வேண்டியது ஹெல்த் கார்டு!



Image result for vadivelu doctor getup



ஹெல்த் கார்டு வாங்கிட்டீங்களா

ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரிசையில் அடுத்து இந்திய மக்களுக்கு வழங்கப்படவிருப்பது ஹெல்த் கார்டு.

இந்தியர்களின் நோய்களின் வரலாற்றை ஹெல்த் கார்டிலுள்ள தனித்துவமான எண்ணை பதிவிட்டால் தெரிந்துகொள்ள முடியும். இந்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை விரைவில் ஹெல்த்கார்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விநியோக்கவிருக்கிறது.


அண்மைய பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்த ஹெல்த் கார்டு விநியோகிக்கப்படவிருக்கிறது. 1.5 லட்சம் சுகாதார மையங்களை தொடங்கி அதில் பயன்படுத்த ஏதுவாக இந்த ஹெல்த் கார்டுகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் மோடி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி சுகாதார மையத்தை தொடங்கி வைத்தார். இதில் தொற்றாநோய்களான புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு சிறப்புக்கவனம் அளிக்கப்படவிருக்கிறது. "சுயநினைவின்றி ஒரு நோயாளி மருத்துவமனை சென்றால்கூட அவரின் ஹெல்த் கார்டு மூலம் அவரின் நோய்கள், மருந்துகள், சிகிச்சை பற்றி மருத்துவர் அறிந்து சிகிச்சை அளிக்கமுடியும்" என்கிறார் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்.  

பிரபலமான இடுகைகள்