இடுகைகள்

நேர்காணல்- ஊடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: "சமூகவலைதளங்களில் உண்மையை அறிவது சிரமம்"

படம்
முத்தாரம் நேர்காணல் "சமூகவலைதளங்களில் உண்மையை அறிவது சிரமம்' டோனி ஹால் , பிபிசி நிறுவன இயக்குநர் . தமிழில் : ச . அன்பரசு பிபிசி இயக்குநரான டோனி ஹால் , 2013 ஆம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் மீண்டும் பணியில் இணைந்துள்ளார் . 1973 ஆம் ஆண்டில் நியூஸ் ட்ரெய்னியாக பணியில் இணைந்தவர் , பிபிசி ஆன்லைன் , பிபிசி பார்லிமெண்ட் , பிபிசி ரேடியோ 5 லைவ் ஆகியவற்றை தொடங்கிய சாதனையாளர் . நியூயார்க் டைம்ஸ் இயக்குநர் அண்மையில் அச்சு ஊடகத்தின் எதிர்காலம் பத்தாண்டுகள் என்று கூறியிருக்கிறார் . பிபிசிக்கு அச்சு ஊடகம் இல்லை . பத்திரிகைகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் ? அச்சு ஊடகம் காணாமல் போகும் என்று நான் நம்பவில்லை . மக்கள் முதலில் ரேடியா , அடுத்து சினிமா சாகும் என்றார்கள் . இன்று என்னாயிற்று ? மார்க் தாம்சனின் கருத்தை எங்களுடைய பிஸினஸ் மாடலுக்கு பொருத்தமுடியாது . ஆனால் தரம் வெல்லும் . அச்சு ஊடகம் சரிந்தால் , நாம் வேறுவழியைத் தேர்ந்தெடுப்போம் . மக்களிடம் நடத்திய சர்வேயில் பல்வேறு செய்தி தளங்களை செக் செய்து இறுதியாக பிபிசி வந்து உண்மையான தகவல்களை அறிகிறோம் என்றார