இடுகைகள்

போலிப்பொருட்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலிப்பொருட்கள் உஷார்!

படம்
ஏமாறாதே ! ஏமாற்றாதே ! - அதிகரிக்கும் டூப் பிஸினஸ் - உஷார் ரிப்போர்ட்   என் நண்பர் ராமமூர்த்திக்கு பரிசுத்த  தரத்திலான பாடல்களை ஆன்மா அதிர  காதில் கேட்க ஆசை . அதற்காக வங்கிக் கணக்கு , தபால் வங்கி , உண்டியல் என அடித்துப் பிடித்து காசு சேர்த்தார் . ஒரு சுபமுகூர்த்த நாளில் அத்தனையும் வழித்து துடைத்து எடுத்து இணையத்தில் வயர்லெஸ் ' போஸ் ' ஸ்பீக்கர்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காலரை மேலே தூக்கிவிட்டார் . அதற்கப்புறம் நடந்த விஷயங்களெல்லாம் வேற லெவல் .   டெலிவரியான ஸ்பீக்கரை கௌரவமாக கையில் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தவர் , போனில் இணைத்து இசையைக் கேட்டபின்தான் நொந்துபோனார் . பேக்கில் அச்சிட்டிருந்த கம்பெனி பெயரெல்லாம் சரிதான் . ஆனால் ஸ்பீக்கரிலிருந்து கம்பெனி பெயரின் எழுத்தில் மட்டும் ஒரே ஒரு எழுத்து கூடியிருந்தது . யெஸ் . டூப் ஸ்பீக்கர் . இது ராமமூர்த்திக்கு மட்டுமல்ல நாளைக்கு உங்களுக்கும் இதுபோல நடக்கலாம் . இந்தியாவின் பிரபல இ - வணிக தளங்களில் அண்மையில் டஜன் கணக்கிலான டூப் பொருட்கள