இடுகைகள்

இமாலயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இமாலயப்பகுதிகளைப் பாதுகாக்கும் வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு!

படம்
  கழிவு மேலாண்மையில் தடுமாறும் இமாலய மாநிலங்கள்! இந்தியாவில் இமாலயப் பகுதிகளை உள்ளடக்கி பத்து மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்.  இங்குள்ள மலைப்பகுதிகளைக்  காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய், மாநிலங்களுக்கு முக்கியமான பொருளாதார ஆதாரமாகும்.  இமாலயப் பகுதிகளில், தோராயமாக ஆண்டுக்கு 80 லட்சம்  டன் கழிவுகள் தேங்கிவருகின்றன. நகரத்தில் தேங்கும் குப்பைகளைச் சேர்த்தால் அளவு இன்னும் கூடும். இதே வேகத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தால் 2025ஆம் ஆண்டில், 24 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது.  இமாலய மாநிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா (Kangra), குலு (Kullu) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் இங்கு வருகை தருபவர்களில் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணிகள், மலையேற்ற வீரர்கள் ஆகியோர்தான் அதிகம். வெளியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகள், உணவு