இடுகைகள்

தீர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலன் மஸ்கின் குணங்கள், பழக்கங்கள், சர்ச்சைகள், தொழில்நிபுணத்துவத்தை சொல்லும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
  புத்தக அறிமுகம் பவர் பிளே டிம் ஹிக்கின்ஸ்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ் புத்தகம் முழுக்க நவீன தொழில்துறை மேசியாவான எலன் மஸ்கைப் பற்றி விவரிக்கிறது. அவர்ரை சிலர் ஜீனியஸ் என்றாலும் சிலர் மோசமான முதலாளி என்கின்றனர். தனது மனதில் தோன்றுவதை பேசி நிறுவனத்தில் பங்குகள் சரிந்தாலும் அதை அடுத்த ஐடியா மூலம் சரிக்கட்டும் திறமை கொண்டவர் எலன்மஸ்க். விண்வெளி ஆய்வு, மின்சார கார் ஆகியவற்றை நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.  மோத் மெலடி ரசாக் ஹாசெட் 1946ஆம் ஆண்டு மா, பப்பு என இரண்டு பேரும் உள்ளூர் பல்கலை ஒன்றில் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களின் பதினான்கு மகள் அய்மாவுக்கு விரைவில் திருமணமாகவிருக்கிறது. அவளைப் பற்றியும் திருமணம் பற்றியும் அவளது சகோதரி ரூப் சொல்லும் கதைகளை நூல் கொண்டுள்ளது. இதயத்தின் கருப்பான பக்கங்களையும் காதல், இழப்பு ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளது.  டிஸ்கார்டன்ட் நோட்ஸ் 1 அண்ட் 2 ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு பல்வேறு சிக்கலான, முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகளை நூல் இருபகுதிகளாக் பிரித்துப் பேசுகிறது. சட்டம் படிப்பவர்கள், வழக்குரைஞர்க

மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி கிளிஷேக்கள் மாறவேண்டும்! - விவேக் தெஜூஜா

படம்
நேர்காணல் விவேக் தெஜூஜா ஓரினச்சேர்க்கையாளர் பற்றி நிறைய சுயசரிதைகள் இன்று வருகின்றன. இதன் பிரயோஜனம் என்ன? மக்களின் சிந்தனைகளை மாற்றும் என நம்புகிறீர்களா? டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு 377 சட்டத்திருத்தம் பற்றி வந்ததும் நான் எழுதிய நூல் இது. ஆனால் இதனை பதிப்பிக்க பதிப்பாளர்களை அணுகியபோது, அவர்கள் இதில் ஆபாசமான கிராபிக் படங்கள் உள்ளன என்று கூறிவிட்டனர். நான் அடுத்த பதிப்பாளரிடம் நகர்ந்துவிட்டேன். இப்படியே நிராகரிப்புகளாக சென்று கொண்டிருந்தது . இன்று நீங்கள் கேட்டதுபோல் சொற்களைத்தான் நான் அதிகம் கேட்கிறேன். ஆனால் இன்று இவை இம்முறையில் அதிகம் பேசப்பட்டாலும், நாளை நிலைமை மாறும். சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரின் குரலும் கேட்கும். அதற்கு நூல்கள் முக்கியமான வழியாக கருதுகிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அதாவது உங்களது பாலினத் தன்மையை ஏற்காதது பற்றி...  இன்று நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நான் என் குடும்பத்தை விட்டு பதினெட்டு வயதில் வெளியேறினேன். அப்போது எனக்கு பிடித்த ஒன்றை மறுக்கிறார்களே என்று கடுமையான வெறுப்பும் விரக்தியும்

காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!

படம்
காந்தி @ 150 காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது. பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை. இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது. பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாட