இடுகைகள்

பதில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, ந...

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா? உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள்.  சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்  உள்ளது.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன? பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.    https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/ https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867 https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/

மாமூத் யானைகளின் காலத்தில் பிரமிடு!

படம்
  மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன! உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குற...

சூரிய ஒளி ஹார்மோன்களை பெருக்குமா? நிஜமா? நிழலா?

படம்
  ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்! உண்மையல்ல.  இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை  என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர். மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!  உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.  டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!  சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியா...