இடுகைகள்

வலசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்

படம்
  வலசை செல்லும் பறவைகளின்  வாழ்விடச்சிக்கல்கள் ஏ.சண்முகானந்தம் பாரதி புத்தகாலயம் 160 காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.   நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும்.  வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம்.  வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை நாம் தெரிந்துகொண