இடுகைகள்

மாசுபாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்சி செய்யப்படுவ